Categories: சினிமா

ஒற்றை காலை இழந்து தவிக்கும் லொள்ளு சபா பிரபலம் சிரிக்கோ உதயாவுக்கு… ஓடோடி சென்று KPY பாலா செய்த பெரிய உதவி..!

Spread the love

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார்.

அடுத்து சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் கேபிஒய் பாலா. அதாவது 340 குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் கொடுத்து உதவினார். மேலும் பல குடும்பங்களுக்கு பெட்ஷீட், பாய் தலையாணி, நைட்டீ, லுங்கி போன்றவற்றை வாங்கி தந்தார்.

இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. இதில் எந்த விளம்பரமும் எனக்கு தேவையில்லை என்றும் அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.  சென்னையில் பல்லாவரத்தை அடுத்துள்ள அழகாப்புதூர் பகுதியில் இலவச ஆட்டோ சேவை திட்டத்தை  தொடங்கி வைத்துள்ளார். அந்த ஆட்டோவில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாிகள், வயதானவர்கள் என வசதியற்ற மக்கள் இலவசமாக பயணிக்கலாம். இப்படி தொடர்ந்து பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து சேவை செய்து வரும் பாலா தற்போது லொள்ளு சபா பிரபலம் சிரிக்கோ உதயாவுக்கு உதவி செய்துள்ளார்.

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிரிக்கோ உதயாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்த நிலையில் சமீபத்தில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இடது கால் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வரும் நிலையில் பாலா தற்போது அவரை நேரில் சந்தித்து தன்னால் முடிந்தது என்று கூறி ஒரு லட்சம் ரூபாய் பண உதவி வழங்கியுள்ளார். பாலாவின் இந்த செயலை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

ரூ.500 கோடி சொத்து சேர்த்து எப்படி..? அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்டணும்… நயினார் பரபரப்பு பேச்சு…!!

2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம்…

2 minutes ago

தமிழக அரசின் திணை பேக்கரி இலவச பயிற்சி…! விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

புதிய தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு…

8 minutes ago

படுக்கைக்கு அழைத்தார்… நான் மறுத்தபோது… தனுஷ் மேலாளர் மீது பரபரப்பு குற்றசாட்டை வைத்த பிரபல நடிகை…!!

சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தன்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தொடர்புகொண்டு, ஒப்பந்தம் செய்ய…

9 minutes ago

“அஜித் நடிக்க வேண்டிய படத்தில் கார்த்திக்கை நடிக்க வச்சேன்…” பல வழிகளில் தொந்தரவு செய்தார்…! புலம்பி தள்ளிய பிரபல இயக்குனர்…!!

வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…

17 minutes ago

அம்மாடியோ..! பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்து விளையாடும் சிறுவர்கள்… இணையத்தை பரபரப்பாக்கிய வீடியோ..!!

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…

19 minutes ago

பார்த்தாலே பதறுதே..! தன்னை கடித்த பாம்பை பிடித்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்ற நபர்… தைரியத்தை பாராட்டு இணையவாசிகள்…!!

உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம்  அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…

49 minutes ago