தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் எப்போதுமே போராடி வருவது வழக்கம். ஆனால் சிலருக்கு அந்த வாய்ப்பு என்பது எளிதாக அமையும். இன்னும் சிலருக்கு சில புதிய முயற்சிகள் கூட நடக்கும். அதன்படி கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் என்ற பிரபல நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சி ஏன் புதுமுக இயக்குனர்கள் பலரும் குறும்படம் எடுத்து வெளியிடுவார்கள்.
அதில் நல்ல குறும்படங்கள் அந்த வாரத்தின் சூப்பர் ஹிட் ஆக தேர்வு செய்யப்படும். பிரபல இயக்குனர்களான பாக்கியராஜ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் அந்த புது முகங்களின் படங்களுக்கு விமர்சனம் கூறுவார்கள். அப்படி நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் சினிமாவில் இதுவரை நிறைய இயக்குனர்கள் வந்துள்ளனர். அதன்படி இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து கலக்கிக் கொண்டிருக்கும் 10 இயக்குனர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கார்த்திக் சுப்புராஜ்:
நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சி மூலமாக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா, பீட்சா, ஜகமே தந்திரம், பேட்ட உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ள நிலையில் தற்போது சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.
நலன் குமாரசாமி:
சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் இடம் மாஸ் திரைப்படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர்தான் நலன் குமாரசாமி.
அஸ்வத் மாரிமுத்து:
ஓ மை கடவுளே திரைப்படம் மூலமாக தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கிய இவர் சமீபத்தில் பிரதீப் ரங்க நாதனை வைத்து இயக்கியிருந்த திரைப்படம் தான் டிராகன். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
நித்திலன் சுவாமிநாதன்:
சோர்ந்து இருந்த விஜய் சேதுபதியின் சினிமா கேரியரை மாற்றியவர் தான் நித்திலன் சுவாமிநாதன். தமிழ் சினிமா தொடங்கி சைனீஸ்வரை கொண்டு சென்ற விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படத்தையும் கொடுத்திருந்தார்.
பாலாஜி மோகன்:
காதலில் சொதப்புவது எப்படி மற்றும் வாயை மூடி பேசவும் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்தான் பாலாஜி மோகன்.
ராம்குமார்:
தனுஷின் மாரி 2 திரைப்படம் மூலமாக பெரிய பிரேக் தமிழ் சினிமாவில் இவருக்கு கிடைத்தது. விஷ்ணு விஷால் நடிப்பில் முண்டாசுப்பட்டி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி கொடுத்தவர் தான் ராம்குமார். அதன் பிறகு தமிழ் சினிமாவின் ஆச்சரிய படைப்பாளர் ராட்சசன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தாலும் அதற்கு அடுத்து இவர் படங்களை இயக்கவில்லை.
மடோன் அஸ்வின்:
நடிகர் யோகி பாபுவின் திரை கரியரில் முக்கிய படமான மண்டேலா திரைப்படத்தை இயக்கியவர் தான் மடோன் அஸ்வின். இவர் இயக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் பல வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனின் கேரியரை மாற்றியது.
அருண்ராஜ் காமராஜ்:
தமிழ் சினிமாவில் நடிப்பில் அசத்தி வருபவர் தான் அருண்ராஜ் காமராஜ். சிவகார்த்திகேயன் நடிப்பில் கனா மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார்.
ஸ்ரீ கணேஷ்:
எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் ஸ்ரீ கணேஷ். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வெற்றியை கொடுத்த இவர் அடுத்ததாக முரளி மகன் அதர்வா நடிப்பில் குருதையாட்டம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…