ஒற்றை காலை இழந்து தவிக்கும் லொள்ளு சபா பிரபலம் சிரிக்கோ உதயாவுக்கு… ஓடோடி சென்று KPY பாலா செய்த பெரிய உதவி..!

By Nanthini on பிப்ரவரி 23, 2025

Spread the love

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார்.

யார் இந்த ஏஞ்சலின்? நீண்ட நாள் காதலியை க்யூட்டாக அறிமுகம் செய்த பாலா

   

அடுத்து சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் கேபிஒய் பாலா. அதாவது 340 குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் கொடுத்து உதவினார். மேலும் பல குடும்பங்களுக்கு பெட்ஷீட், பாய் தலையாணி, நைட்டீ, லுங்கி போன்றவற்றை வாங்கி தந்தார்.

   

KPY Bala Gets Celebrated By Fans For Gifting Free Ambulance To The Needy; Says 'Bala Is The Real Super Star..' - Filmibeat

 

இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. இதில் எந்த விளம்பரமும் எனக்கு தேவையில்லை என்றும் அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.  சென்னையில் பல்லாவரத்தை அடுத்துள்ள அழகாப்புதூர் பகுதியில் இலவச ஆட்டோ சேவை திட்டத்தை  தொடங்கி வைத்துள்ளார். அந்த ஆட்டோவில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாிகள், வயதானவர்கள் என வசதியற்ற மக்கள் இலவசமாக பயணிக்கலாம். இப்படி தொடர்ந்து பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து சேவை செய்து வரும் பாலா தற்போது லொள்ளு சபா பிரபலம் சிரிக்கோ உதயாவுக்கு உதவி செய்துள்ளார்.

ஒரு காலை இழந்த லொள்ளு சபா உதயா!! நேரில் சந்தித்த விஜய் டிவி தங்கதுரை..

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிரிக்கோ உதயாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்த நிலையில் சமீபத்தில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இடது கால் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வரும் நிலையில் பாலா தற்போது அவரை நேரில் சந்தித்து தன்னால் முடிந்தது என்று கூறி ஒரு லட்சம் ரூபாய் பண உதவி வழங்கியுள்ளார். பாலாவின் இந்த செயலை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Balan Akassh Balaiyan Jaganathan பதிவைப் பகிர்ந்துள்ளார் (@bjbala_kpy)