Categories: சினிமா

விஷாலுக்காக கீர்த்தி சுரேஷை பெண் கேட்டுச் சென்ற இயக்குனர் லிங்குசாமி… அதற்கு கீர்த்தி என்ன பதில் சொன்னார் தெரியுமா..?

Spread the love

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் மோகன் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய அம்மாவிற்கு பிறகு சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் ஹீரோயினியாக அறிமுகமானது மலையாள மொழியில் தான். தமிழ் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படத்திற்கு பிறகு சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த நிலையில் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

பிறகு தமிழில் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்க்கு ஜோடியாக இரண்டு முறை ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். இவரை தென்னிந்திய திரை உலக முழுவதும் பிரபலமாகியது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்ட மகா நடிகை திரைப்படம் தான். இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக பேபி ஜான் படத்தில் நடித்திருந்தார். இதனிடையே கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கீர்த்தி சுரேஷ் தனது காதலரை கரம் பிடித்தார். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இப்படியான நிலையில் விஷாலுக்காக கீர்த்தி சுரேஷ் பெண் கேட்டு சென்ற சம்பவம் குறித்த இயக்குனர் லிங்குசாமி பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், விஷாலுக்கு கீர்த்தியை பெண் கேட்டு சொல்லுங்கள் என்று விஷாலின் அப்பா என்கிட்ட சொன்னாரு. நான் கீர்த்தி கிட்ட போய் நின்றதும், என்ன சார் இவ்வளவு தூரம் என்று கேட்டார்கள். அப்போ அவங்க கிட்ட விஷால் பற்றி நான் சொன்னதும், ஸ்கூல் படிக்கும்போது இருந்து இருக்கின்ற காதல் பற்றி கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக சொன்னாங்க. அவர்தான் இப்போ கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொண்டுள்ளார். அது மட்டுமல்லாமல் கீர்த்தியோட வெற்றிக்கு பெரிய பின்புலம் அந்தப் பையன் தான். கீர்த்தியின் மூன்று நாள் திருமணத்திற்கு நானும் சென்றிருந்தேன். மிகவும் நெருங்கிய நண்பர்களை மட்டும் தான் அழைத்து இருந்தார்கள் என்று இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

அட கொடுமையே… வேலையை விட்டு தூக்கியதால் ஆத்திரம்… சலூன் உரிமையாளரை கொடூரமாக தாக்கிய கும்பல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

அவளஹள்ளியில் உள்ள ஒரு யூனிசெக்ஸ் சலூன் உரிமையாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி,…

1 minute ago

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

9 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

9 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

9 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

9 மணத்தியாலங்கள் ago