Categories: சினிமா

அவர் படத்துல உனக்கென்ன வேலை?… போன் போட்டு செந்திலைக் கலாய்த்த கவுண்டமணி – எஞ்சாய் பண்ணி சொன்ன ரஜினி!

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளனர். முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் செந்தில் ஆசைப்படவில்லை. நாடகங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

அப்போது அவரின் வெகுளித்தனம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை வைத்து சுற்றி இருப்பவர்கள் எல்லாம் காமெடியாக அவரை கேலி செய்வார்களாம். அதைப் பார்த்து பாக்யராஜ் தன்னுடைய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்களைக் கொடுத்தார். தூறல் நின்னு போச்சு படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்த போது நன்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதாராம்.

கவுண்டமணியோடு அவர் உதயகீதம் மற்றும் வைதேகி காத்திருந்தாள் போன்ற இணைந்து நடித்த போது அந்த இணையின் மீதான கவனம் ரசிகர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அதன் பின்னர் கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டது அவர்களின் நகைச்சுவை. இருவரும் இணைந்து நடித்தாலும் சம்பளத்தைப் பொறுத்தவரை கவுண்டமணிக்குதான் அதிகமாக தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களாம்.

செந்தில் கவுண்டமணி அண்ணனுக்கு கொடுப்பதில் பாதியை எனக்குக் கொடுங்கள் என வாங்கிக் கொள்வாராம். இப்படி 25 வருடங்களுக்கு மேலாக இணைந்திருந்த அவர்கள் கடைசி 15 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து நடிக்கவில்லை. அதன் பின்னர் தனித்தனியாக படங்களில் நடித்தாலும் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் கவுண்டமணி செந்தில் நட்பைப் பற்றி பேசியுள்ளார். அதில் “நானும் செந்திலும் வீரா படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது செந்திலுக்கு கவுண்டமணியிடம் இருந்து போன் வந்தது. அவர் செந்திலிடம் “எங்கடா இருக்க?” என்றார். செந்தில் “அண்ண ரஜினிகாந்த் பட ஷூட்டிங்” என்றார். அதைக் கேட்டு கவுண்டமணி “அவரு படத்துல நீ என்னப் பண்ற?.. அவரே எல்லாக் காமெடியையும் பண்ணிடுவார்” எனக் கூறினார். இதைக் கேட்டு நான் விழுந்து விழுந்து சிரித்தேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

5 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

5 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

5 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

5 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

5 மணத்தியாலங்கள் ago