தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அதன் பிறகு பெரும்பாலும் அவர் ஹீரோவாக நடிக்கவே முன்னுரிமை கொடுத்தார். 80 களில் முன்னணி நடிகராக இருந்த அவர் 90 களில் தனது மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் என இயக்குனராக மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் ஓடாததால் அவரால் இயக்குனராக அதன் பின்னர் தொடர முடியவில்லை. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக இப்போது கலக்கி வருகிறார்.
பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவான படம் ‘இது நம்ம ஆளு’. அந்த படத்தை அவரின் உதவி இயக்குனர் பால குமாரன் இயக்கினார். படம் மிகப்பெரிய ஹிட். இந்நிலையில் அந்த படம் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவலை பாக்யராஜ் பகிர்ந்துள்ளார்.
அதில் “அப்போது அந்தக் கதையை நான் எனக்காக எழுதவில்லை. பாரதிராஜா சாருக்கு நல்ல கதை கிடைக்கவில்லை என கலைஞானம் அண்ணன் சொன்னதால் அவருக்காகதான் எழுதினேன். கதை முடிந்ததும் அவரிடம் சொல்ல நாங்கள் சென்றோம். அப்போதுதான் அவர் மதுரையில் நடந்த ஒரு நாடகத்தைப் பார்த்துவிட்டு அதைக் கதையாக்க முடிவு செய்திருந்தார். அந்த கதையும் நான் வைத்திருந்த கதையைப் போன்றதுதான். அந்த படம்தான் வேதம் புதிது. அதனால் நான் அவரிடம் எதற்காக வந்தேன் என சொல்லாமல் அப்படியே திரும்பி வந்துவிட்டேன். பின்னர்தான் அதை நானே உருவாக்கினேன்.” எனக் கூறியுள்ளார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…