Categories: சினிமா

இந்த நாலு இயக்குனர்களோட படம் வந்தாதான் எனக்கு அப்பாடா என்றிருக்கும்… ஓப்பனாக சொன்ன இளையராஜா!

Spread the love

இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

இதையடுத்து இப்போது இளையராஜா தற்போது தன்னுடைய ‘valiant’ என்ற முதல் சிம்ஃபொனியை நிகழ்த்த உள்ளார். அதற்கான ஒத்திகை வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் பாலு மகேந்திராவைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசும்போது 80 களில் தன்னுடைய இசையமைப்புப் பற்றியும் தனக்குப் பிடித்த இயக்குனர்களோடு பணியாற்றியது பற்றியும் பேசியுள்ளார். அதில் “பாலு மகேந்திரா சார் ஒரு படம் முடித்துவிட்டு அடுத்த படத்துக்கு வருவதற்குள் நான் ஐம்பது அறுபது படங்கள் முடித்திருப்பேன். ஆனால் எனக்கு யார் படங்களுக்கு எல்லாம் இசையமைக்கப் பிடிக்குமென்றால் மிகக் குறைவானவர்கள்தான்… பாலு மகேந்திரா, பாரதிராஜா , மணிரத்னம் மற்றும் மகேந்திரன். இவர்கள் படமெல்லாம் வந்தால் எனக்கு அப்பாடா என்றிருக்கும்.” எனப் பாராட்டிப் பேசியுள்ளார்.

இவர்கள் அனைவரும் மென்மையான உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது மாதிரியான படங்களாக இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

“என் மகளை மறந்துவிடு”.. மகளின் காதலால் ஆத்திரம்.. ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டி… தந்தையும் மகனும் சேர்ந்து செய்த கொடூரம்… குன்னூரை உலுக்கிய கொடூரச் சம்பவம்…!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கக்கன்நகர் பகுதியில் நிகழ்ந்த இந்த பயங்கர கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை…

1 minute ago

“உங்க வயிற்றுக்குள்ளும் இந்த தீப்பொறி இருக்கா?.. அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து… 10 நிமிடத்தில் எரிச்சலை விரட்டியடிக்க இதோ 5 வழிகள்”…!!!

காஸ்ட்ரைடிஸ் (Gastritis) என்பது வயிற்றின் உட்புறப் பாதுகாப்பச் சுவரில் ஏற்படும் அழற்சியாகும். இது ஆரம்பத்தில் வெறும் வயிற்று எரிச்சலாகத் தோன்றினாலும்,…

12 minutes ago

சத்தமில்லாமல் விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’… பனையூருக்கு விரைந்த 298 பேர்… ரகசிய மீட்டிங்கில் விஜய் கொடுத்த ‘அசைன்மென்ட்’…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தீவிர அரசியல்…

21 minutes ago

“அந்த மசோதா அப்பவே பாஸ் ஆயிடுச்சு!” – பவன் கல்யாணின் பதிவை கிழித்துத் தொங்கவிட்ட பிரகாஷ் ராஜ்… மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் வெடித்தது போர்…!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே…

27 minutes ago

“திமுக-வின் ‘துரந்தர்’ பிரேமலதா!”… இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் மீம்ஸ்… கோபத்தில் உடன்பிறப்புகள்… குஷியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சமீபத்திய நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில்…

31 minutes ago