கோடம்பாக்கம் ஒரு கிராமம்ன்னு சொன்னா நம்புவீங்களா? இதை படிச்சா நீங்க நம்பிதான் ஆகனும்!

Spread the love

“இப்போது மிகப்பெரிய நகரமாக இருக்கும் பல ஊர்கள் எல்லாம் ஒரு காலகட்டத்தில் கிராமமாகத்தான் இருந்திருக்கும். இதில் என்ன புதுமை இருக்கப்போகிறது?” என்று பலருக்கும் தோன்றலாம். இப்படி நாம் ஒரு செய்தியை உதிர்த்துவிட்டு கடந்து போய்விடலாம்தான். ஆனால் நாம் இப்போது வசித்துக்கொண்டிருக்கும் இடம் ஒரு காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பதை தெரிந்துகொள்வதில் ஒரு அலாதியான இன்பம் இருக்கத்தான் செய்கிறது.

அவ்வாறு சென்னையின் முக்கிய இடமாக திகழும், இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் மிகப் பெரிய ஆளாக வரவேண்டும் என்று போராடும் ஒவ்வொருவருக்கும் மிகவும் பரிச்சயமான இடமாக திகழ்ந்து வரும் இடம்தான் கோடம்பாக்கம். இந்த கோடம்பாக்கம் இப்போது எப்படி ஒரு நவீன நகரத்திற்கான வடிவமாக திகழ்கிறது என்பதை நாம் கண்முண்ணே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் இந்த கோடம்பக்கம் இப்படி எல்லாம் இருந்ததா? என்று ஆச்சரியப்படும் வகையில் ஒரு தகவலை தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார், பழம்பெரும் சினிமா கதாசிரியராக திகழ்ந்த கலைஞானம்.

கலைஞானம் 1940களில் சினிமா வாய்ப்புத் தேடி சென்னையில் அலைந்துகொண்டிருந்தாராம். அப்போது ஒரு நாள் மைலாப்பூரில் இருந்து வடபழனியில் அமைந்திருக்கும் வாஹினி ஸ்டூடியோவிற்கு அவர் போகவேண்டும். குதிரை வண்டியிலோ, பஸ்ஸிலோ போக அவரிடம் பணம் இல்லை. நடந்துதான் போகவேண்டும். ஆனால் மாலையையும் கடந்து இருட்டிவிட்டதாம்.

மைலாப்பூருக்கும் வடபழனிக்கும் நடுவில் இருக்கும் கோடம்பாக்கத்தை இரவு நேரம் நடந்து கடக்க முடியாதாம். எங்கு பார்த்தாலும் ஏரியும், முட்செடியுமாய் இருக்குமாம். அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வீடுகள் இருக்குமாம். மேலும் அக்காலகட்டத்தில் சென்னையில் அசால்ட்டாக ஊருக்குள் பல நரிகள் உலாவுமாம். இதனாலேயே அவர் பனகல் பார்க்கில் படுத்துவிட்டு அதிகாலையில் எழுந்துச் சென்றிருக்கிறார். கோடம்பாக்கவாசிகள் இப்போது படுத்திருக்கும் இடம் ஒரு காலத்தில் ஒரு ஏரியாகவோ அல்லது முட்செடிகள் நிறைந்த காடாகவோ இருந்திருக்கலாம் என்று நினைக்கும்போது கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது.

 

Arun

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

15 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago