டாடா நிறுவனத்தின் சேர்மனான ரத்தன் டாடாதான் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருப்பவர். அம்பானி, அதானி போன்ற பலரும் டாப் பணக்காரர்களின் பட்டியலில் ஜொலித்துக்கொண்டிருக்க ரத்தன் டாடா மட்டும் கொஞ்சம் பதுங்கியே இருப்பது அனைவருக்கும் வியப்பைத் தரலாம்.
டாப் பணக்காரர்களின் வரிசையில் ரத்தன் டாடா இல்லை என்றால் அப்போது டாடா நிறுவனத்திற்கு என்ன வருமானம் குறைவாகவா வருகிறது? என்ற கேள்வி எழலாம். ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் ரத்தன் டாடா தனது நிறுவனத்தின் 60% சதவிகித வருமானத்தினை நன்கொடையாக மட்டுமே வழங்குவிடுகிறாராம். இவ்வாறு ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பல நாட்களாக வலம் வந்துகொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் டாடா நிறுவனத்தை குறித்து மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவலை இப்போது பார்க்கலாம். அதாவது டாடா நிறுவத்திற்கு விதை போட்ட ஜாம்ஷெட்ஜி டாடா, 1868 ஆம் ஆண்டு நாக்பூர் பகுதியில் ஒரு காட்டன் தொழிற்சாலையை தொடங்குகிறார். அப்போது பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறார் ஜாம்ஷெட்ஜி.
ஆனால் அந்த தொழிலாளர்கள் பலரும் அடிக்கடி விடுமுறை எடுத்தார்களாம். ஒழுங்காகவே வேலைக்கு வராமல் போக டாடா நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாம். இதனால் தொழிலாளர்களின் மேல் நியாயமாக கோபம் வரவேண்டும். அந்த தொழிலாளர்களை எல்லாம் வேலைவிட்டே தூக்கிவிடுவதுதான் யதார்த்தம்.
ஆனால் ஜாம்ஷெட்ஜி வேறு ஒரு விஷயத்தை செய்தார். அதாவது தொழிலாளர்கள் வேலையை விட்டுவிட்டுச் சென்றாலுமே அவர்களுக்கு ஊதியம் உண்டு என அறிவித்தாராம். அவ்வாறு வந்ததுதான் Provident Fund.
அது மட்டுமல்லாது இனி 8 மணிநேரம்தான் வேலை நேரம் என்பதை நடைமுறைப்படுத்தினார் ஜாம்ஷெட்ஜி டாடா. மேலும் தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்பட்டால் இன்சுரன்ஸ் தரப்படும் என்ற முறையையும் தனது தொழிற்சாலையில் அறிமுகப்படுத்தினார் டாடா. இவ்வாறு தற்போது தொழிலாளர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் பல விஷயங்களுக்கு விதை போட்டவராக திக்ழ்ந்திருக்கிறார் ஜாம்ஷெட்ஜி டாடா.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…