Categories: சினிமா

நீ இல்லனா உயிரை விட்டுவிடுவேன், பெண் கேட்டு வீட்டுக்கு வந்து கெஞ்சியே பிரபல நடிகர்.. சீக்ரெட்டை பகிர்ந்த கிழக்கு சீமையிலே அஸ்வினி..!

Spread the love

அஸ்வினி நம்பியார் என்று அழைக்கப்படும் ருத்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்த பிரபலமான நடிகை ஆவார். அஸ்வினி தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது ஒரு மலையாள பத்திரிகைக்காக தனது வகுப்பு தோழிகளுடன் மாடலிங் பணிகளை செய்தார். அப்போது அந்த பத்திரிகையை பார்த்து இயக்குனர் பாரதிராஜா புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். பாரதிராஜா அவர்களின் மூலம் 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் அஸ்வினி.

தொடர்ந்து தூரத்து சொந்தம், 1993 ஆம் ஆண்டு கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கிழக்கு சீமையிலே திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார் அஸ்வினி. ஆத்தங்கர மரமே என்ற பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாக உள்ளது. தொடர்ந்து புதுப்பட்டி பொன்னுத்தாயி, முதல் பயணம், பெரிய தம்பி, கள்ளழகர், என்னவளே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் அஸ்வினி. திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் சென்று செட்டிலான அஸ்வினி சிங்கப்பூரில் எடுக்கப்படும் தொடர் மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஸ்வினி சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் கிழக்கு சீமையிலே படம் பண்ணதுக்கு அப்புறம் எனக்கு நிறைய லவ் ப்ரோபோசல் வந்தது. அதிலும் குறிப்பாக கிராமத்தில இருக்கக்கூடிய ஒருத்தன் கிழக்கு சீமையிலே படத்தில் வரும் பேச்சு என்ற பெயரை வைத்து எனக்கு ஆறு மாசம் தொடர்ந்து லெட்டர் எழுதினார். ஒரு கட்டத்துல ரொம்ப கோபப்பட்டு அவர் லெட்டர் எழுத ஆரம்பிச்சிட்டாரு. இதை எங்க அம்மா தான் ஹாண்டில் பண்ணாங்க. நாங்க மலையாளம் ஃபேமிலி என்பதால் தமிழ் தெரிஞ்ச ஒருத்தவங்க கிட்ட சொல்லி இது மாதிரி எல்லாம் பண்ணாதீங்க என்று அந்த நபருக்கு லெட்டர் எழுதினார்கள். அதுக்கப்புறம் வர எந்த லெட்டரையும் எங்க அம்மா என்ன பிரிச்சு படிக்கவே விடல.

கூட நடிச்ச நடிகர்கள் கூட எனக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க. அதுலயும் ஒரு நடிகர் வீட்டுக்கு வந்து எங்க அம்மா கிட்ட பொண்ணு கேட்டு கெஞ்சுனாரு. என்ன பொறுத்த வரைக்கும் யார் என்கிட்ட எது சொன்னாலும் அம்மா கிட்ட பேசிக்கோங்க என்று சொல்லிடுவேன். என்னோட கேரியர் மட்டும் தான் என்னோட மைண்டுல இருந்துச்சு. ஒரு கட்டத்துல அந்த நடிகர் நீங்க இல்லனா உயிரை விட்டுவிடுவேன் என்று எழுதும் அளவுக்கு வந்துட்டாரு.

எனக்கே அது ரொம்ப பயமா போயிருச்சு. அந்த நடிகர் இன்னும் சினிமாவுல நடிச்சிட்டு தான் இருக்காரு. அதுக்கப்புறம் எங்க அம்மா அந்த விஷயத்தை பார்த்துக்கிட்டாங்க. அப்போதிலிருந்து போஸ்ட்மேன் கிட்ட எந்த லெட்டர் வந்தாலும் வீட்டுக்கு கொண்டு வர வேண்டாம் நான் இருந்தா மட்டும் கூட என்று சொல்லி வச்சிட்டாங்க. அப்புறமா வந்த எந்த லெட்டரையும் நான் படிக்கவே இல்லை என்று தனக்கு வந்த லவ் ப்ரொபோசல் குறித்து அஸ்வினி பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

5 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

5 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

5 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

6 மணத்தியாலங்கள் ago