Categories: சினிமா

“ஒல்லியா, கருப்பா இருக்கேன்னு நிறைய நாள் அழுதுருக்கேன்”.. நடிகர் அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியன் உருக்கம்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவர் ‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.  இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.

இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வமும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கீர்த்தி பாண்டியன் தும்பா மற்றும் அன்பிற்கினியால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்பொழுது அசோக் செல்வன் நடிப்பில் ‘சபாநாயகன்’ திரைப்படமும் ,கீர்த்தி பாண்டியன் நடிப்பில் ‘கண்ணகி’ திரைப்படமும் டிசம்பர் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. சோசியல் மீடியாவில் கீர்த்தியின் உருவத்தை கேலி செய்து பல்வேறு பெண்கள் கமெண்ட் செய்து வந்தனர். . இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சரியான பதிலடியும் கொடுத்தார் நடிகர் அசோக் செல்வன். தற்பொழுது இவர்கள் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி மனம் திறந்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் ‘ நான் நீண்ட காலமாகவே ஒல்லியாக இருந்தேன். அதோடு கருப்பாகவும் இருந்தேன். காரணம் நான் எப்போதுமே வெயிலில்தான் சுற்றிக் கொண்டிருப்பேன். அப்போது என்னோட தோற்றத்தை பற்றியும்,நிறத்தை பற்றியும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோது கவலையில் அழுதுள்ளேன். ஆனால் இப்போது அதைப்பற்றி யோசித்துப் பார்த்தால் அந்த காலத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்

Begam

Recent Posts

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

7 minutes ago

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்… இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்… ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்… மத்திய அரசின் அதிரடி அப்டேட்…!!

மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…

8 minutes ago

கணவனே எமன்…. அன்னூர் கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்…. 4 நாளில் வெளியான பகீர் உண்மை….!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…

11 minutes ago

எல்பிஜி சிலிண்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி… ஜூன் 30-க்குப் பிறகு கனெக்ஷன் கட்…? மத்திய அரசின் நியூ அப்டேட்…!!

இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…

14 minutes ago

காலையிலேயே பரபரப்பு… இனி தவெக-வும் இல்ல, அதிமுக-வும் இல்ல…. சி.விஜயபாஸ்கரின் ‘ஸ்கெட்ச்’… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…

16 minutes ago

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

19 minutes ago