கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்துடன் தாம் உடன்படுவதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பார்த்திபன், தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயை சந்திக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை. ஒருவேளை அவரை சந்தித்தால் மகிழ்ச்சியாக பேசுவேன். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற கரூருக்கு விஜய் சென்றால் கூட்டம் எதிர்பாராத விதமாக கூடும் என்பதால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு அழைத்து பேசியதில் எந்த தவறும் கிடையாது.
விஜய் மட்டுமல்ல யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்க வேண்டும். சமீபத்தில் சட்டசபையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் கலகலப்பாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதுதான் நாகரிகமான அரசியல். அதுபோல அரசியலில் விஜயை வரவேற்கின்றேன். ஒரு கட்சிக்கு அரசியலில் வாய்ப்பு கொடுத்தால் ஐந்து வருடம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அதன் பிறகே அதிருப்தி இருந்தால் தேர்தலில் வெளிப்படுத்த வேண்டும் என அஜித் சொன்னது எனக்கு பிடித்திருந்தது. n கரூர் சம்பவத்தில் விஜய் மட்டும் பொறுப்பல்லை என்று அஜித் சொல்லி இருப்பதன் மூலம் இனிமேல் இதுபோன்ற துயர சம்பவம் நடைபெறக்கூடாது என்பதை அவர் கூறுகிறார் என்று புரிந்து கொள்கின்றேன். கரூருக்கு விஜய் இரங்கல் தெரிவிக்க சென்றாள் கூட கூட்டம் எதிர்பாராத விதமாக கூடும் என்பதால் பனையூரில் அழைத்து இறந்தவர்களை சந்தித்துள்ளார். அதில் அவருக்கும் மகிழ்ச்சி அந்த குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி. இதில் எந்த ஒரு தவறும் கிடையாது என்று நடிகர் பார்த்திபன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…
டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…