கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தனது வாழ்நாளின் மிகப்பெரிய வலி என்றும், காவல்துறை நினைத்திருந்தால் அன்றைய பொதுக்கூட்டத்தை எளிதாக ரத்து செய்திருக்கலாம் என்றும் தமிழக முதல்வர் விஜய் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார். 41 பேரின் உயிரைப் பறித்த இந்த சோகமான சம்பவம் தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதோடு, சிபிஐ விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகக் கரூர் மண்ணில் கால்பதித்த விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி ஆணைகளை வழங்கும் மேடையில் இந்த விவகாரம் குறித்துப் பேசி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், கரூர் சம்பவத்திற்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஒப்பிட்டுக் காட்டினார். தாங்கள் பெரம்பலூருக்குச் சென்றபோது கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, அங்கு வர வேண்டாம் என காவல்துறை முன்கூட்டியே அறிவுறுத்தியதாகவும், அதை ஏற்றுக்கொண்டு தாங்கள் பொதுக்கூட்டத்தைத் தவிர்த்ததாகவும் குறிப்பிட்டார். அதேபோல, நாமக்கல் கூட்டத்தை முடித்துவிட்டு கரூருக்குப் பயணம் செய்வதற்கு முன்பும் காவல்துறை தங்களை எச்சரித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஆனால், கரூரில் காவல்துறை தங்களை எச்சரிக்காமல், பாதுகாப்பு கொடுத்து உள்ளே அழைத்து வந்து ஒரு நாடகத்தை ஆடியதாகக் குற்றம் சாட்டினார்.
“போலீசார் சொன்னதை நம்பி நான் உள்ளே சென்றுவிட்டேன். ஆனால், அங்கு என் அக்கா, தங்கைகளையும், குழந்தைகளையும் இழந்தோம். அந்தப் பழியை அப்படியே எங்கள் மீது தூக்கிப் போட்டீர்கள்,” என்று உணர்ச்சிவசப்பட்ட விஜய், வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேள்வி எழுப்பினார். மேலும், பணமா ஜனமா என்றால் தமக்கு எப்போதுமே ஜனம் தான் முக்கியம் என்றும், நமக்காக வந்த மக்களைக் காக்க வைத்து ஆதாயம் தேடுபவன் தான் அல்ல என்றும் ஆவேசமாகப் பேசினார். குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்று குறிப்பிட்ட அவர், கட்சி நிதி என்றதுமே ஓட்டம் பிடித்தவர்களின் முகமூடிகள் ஒவ்வொன்றாகக் கிழிந்து வருவதாகவும் சாடினார்.
தற்போது கரூர் விவகாரத்தை சிபிஐ மிகத் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், இந்த விசாரணைக்கு இடையே ஒட்டுமொத்தப் புகாரையும் அப்படியே காவல்துறை மீது திருப்பும் விதமாக முதல்வர் விஜய் பேசியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் தீவிர விசாரணை ஒன்று போய்க்கொண்டிருக்கும் போது, ஒரு மாநில முதல்வரே தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மீது இத்தகைய பகிரங்கக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். முக்கியமாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள ‘மூளை’ யார் என்ற கேள்வியோடு விஜய் போலீஸ் பக்கம் பழியைத் திருப்பியிருப்பது சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கிய எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…