கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள ஒரு கவரிங் நகைக்கடையில் நூதன முறையில் நகை திருடிய வழக்கில், புத்தளம் பேரூராட்சி திமுக துணைத் தலைவி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் ஷார்லின் சேம் என்பவர் நடத்தி வரும் கவரிங் நகைக்கடையில் இந்த துணிகரத் திருட்டு அரங்கேறியுள்ளது.
சம்பவத்தன்று, கடையின் பெண் ஊழியர் மட்டும் தனியாக இருந்த நேரத்தில், ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்கள் என ஐந்து பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவது போல் கடைக்குள் நுழைந்துள்ளனர். ஊழியரின் கவனத்தை திசைதிருப்பிய அவர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட காப்புகள், தாலிச் சங்கிலிகள் மற்றும் ஐம்பொன் நகைகளைத் திருடித் தங்களது பையில் மறைத்து வைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
நகைகள் மாயமானதை உணர்ந்த ஊழியர் அளித்த புகாரின் பேரில், குளச்சல் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த சோதனையில், திருட்டில் ஈடுபட்டது புத்தளம் பேரூராட்சி தி.மு.க துணைத் தலைவி பால்தங்கம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பால்தங்கம், அவரது மகள் சபரிஷா, கார் ஓட்டுநர் அனிஷ் மற்றும் உறவினர் தங்க புஷ்பம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர் பால்தங்கம் மீது ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவரே தனது குடும்பத்துடன் சேர்ந்து கடையின் கவனத்தை திசைதிருப்பி நகைத் திருட்டில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. தலைமறைவாக உள்ள மற்றொரு பெண்ணை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…