தமிழ் சினிமாவில் தன்னுடைய மனித உணர்ச்சிகளால் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலமாக உயிர் கொடுத்தவர்தான் கண்ணதாசன். காதல், தாலாட்டு மற்றும் சோகம் என்று அனைத்திற்கும் தன்னுடைய வரிகளால் ஆறுதல் கூறியுள்ள கண்ணதாசனின் இன்று இல்லை என்றாலும் அவருடைய பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் எம் எஸ் வி முக்கிய காரணம் என்று சொல்லலாம். எம் எஸ் வி மற்றும் கண்ணதாசன் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில் இவர்களின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சினிமாவில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு காட்சிக்கும் என்றது போல தன் பாணியில் பாடல் எழுதுவதில் வல்லவர்.
அப்படி ஒரு சுவாரசியமான சம்பவம் கீழ்வானம் சிவக்கும் என்ற திரைப்படத்தில் நடந்துள்ளது. அதாவது கடந்த 1981 ஆம் ஆண்டு முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கீழ்வானம் சிவக்கும். இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சரிதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மற்றொரு பக்கம் படத்திற்கான கம்போசிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில், முத்தா சீனிவாசன் மற்றும் எம்.எஸ்.வி இருவரும் கவிஞர் கண்ணதாசனுக்காக காத்திருந்தனர்.
பிறகு நீண்ட நேரம் கழித்து கண்ணதாசன் வந்ததும் முக்தா சீனிவாசன் கதையை சொல்கிறார். அதாவது ஒரு திருமணத்திற்குள் இருக்க வேண்டிய பாட்டு திருமணம் என்பது எவ்வளவு மகிழ்ச்சியானது என்பதை சொல்ல வேண்டும் அது மட்டும் அல்லாமல் இந்த பாட்டு காலம் கடந்து நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படி அவர் சொன்னதும் கவிஞர் எழுதி முடித்ததும் வந்த பாட்டு தான் “கடவுள் நினைத்தான் மலராய் கொடுத்தான் வாழ்க்கை உண்டானது” என்ற பாடல். கண்ணதாசன் வரிகளில் டி.எம் சௌந்தரராஜன் பாடிய பாடல் தான் இந்த பாடல்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…