தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில், ‘முதல்வர் விஜயின் எலும்பை உடைப்போம்’ எனப் பேசியதாக விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக தவெகவினர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கருணாநிதி, அப்துல் வகாப் மற்றும் கீதா ஜீவன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, சிறையில் உள்ள மார்க்கண்டேயன் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த கனிமொழி எம்பி, “தவெக அரசுக்கு ஜனநாயகத்தின் மீதோ, மக்கள் மீதோ எந்தவித அக்கறையும் நம்பிக்கையும் இல்லை. அரசியல் விமர்சனங்களை ஏற்கும் மனப்பக்குவம் முதல்வர் விஜய்க்கு முற்றிலும் இல்லை. எதிர்க்கட்சியினரை அடக்குவதற்கும், தவெக அரசை விமர்சித்து கருத்து தெரிவிக்கும் யூடியூபர்கள் உள்ளிட்ட அனைவரையும் சிறைக்கு அனுப்புவதற்கும் மட்டுமே காவல் துறை பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், “முந்தைய திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஸ்டாலினை விஜய் எவ்வளவு கடுமையாக விமர்சித்தார் என்பதை மக்கள் அறிவர். ஆனால், அப்போதெல்லாம் திமுக அரசு இதுபோன்ற அடக்குமுறைகளில் ஈடுபட்டதில்லை. பிரதமர் மோடி எந்த வழியில் ஆட்சி நடத்துகிறாரோ, அதே வழியில்தான் விஜயும் ஆட்சி நடத்துகிறார். பாஜகவுக்கு எதிராகப் குரல் கொடுப்பவர்களை எப்படி நடத்துகிறார்களோ, அதேபோல்தான் தவெக அரசும் இங்குப் போராடுபவர்களைக் கையாள்கிறது. எனினும், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் கொள்க விஷயத்தில் திமுக என்றும் விட்டுக்கொடுக்காது” என உறுதியாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் (கைரேகை அல்லது கருவிழி)…
காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் மீண்டும் ஒரு பெரும் சிக்கல் உருவாகி, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியைச் சேர்ந்த 35 வயதான மாற்றுத்திறனாளி ஹரி ராம் சிங் கொடூரமான முறையில்…
மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் திமுகவால் இயங்க முடியாது என்பதே வரலாறு என்று மூத்த…
சேலம் மாவட்டம் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக…
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் இளைஞரை இரண்டு பாம்புகள் பின்தொடர்ந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், இது AI தொழில்நுட்பத்தைப்…