Connect with us

TRENDING

LEO படத்தின் மானத்தை கப்பல் ஏத்திய அந்த பிரச்சனை.. சுதாரித்துக்கொண்டு, சூர்யாவின் கங்குவா படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்..

இன்றையப் படங்கள் அனைத்தும் பிரம்மாண்டம் பிரம்மாண்டம் என்ற பெயரில் ஒரே ஒரு பாடலுக்காக ஆயிரம் இரண்டாயிரம் பேரை ஆட வைப்பது, பிரம்மாண்டமாக செட் போடுவது என பல கோடி ரூபாய் பணத்தை வீணடிக்கத்தான் செய்கிறார்களே தவிர, அதன் ரிசல்ட் என்பது, சரியாக வருகிறதா எனப் பார்த்தால் அதுவும் சரியாக வருவதில்லை. உதாரணத்திற்கு விஜய்யின் லியோ படத்தில் நான் வரவா என்ற பாடலுக்காக, கிட்டத்தட்ட 2 ஆயிரம் நடன கலைஞர்கள் ஆடியிருந்தார்கள். அந்தப் பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஆனால் அந்த இரண்டாயிரம் கலைஞர்களுக்கு சரியான ஊதியம் தரவில்லை என பிரச்னையும் கிளம்பியது.

#image_title

   

அதற்கு படக்குழு சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. அதாவது சங்கத்தில் முறைப்படி பதிவு செய்தவர்களுக்கு ஒரு தொகையும், தரகர்கள் மூலம் அழைத்து வரப்பட்ட நடன கலைஞர்களுக்கு ஒரு தொகையும் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. எதற்கு இந்த தொந்தரவு என யோசித்த கங்குவா படக்குழுவினர் சபயோஜிதமாக யோசித்து ஒரு முடிவெடுத்துள்ளனர்.

#image_title

கடந்த 2019-ம் ஆண்டு சூர்யாவின் 39-வது படமாக கங்குவா என்ற வரலாற்று பின்னணி கொண்ட படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதலில் 10 மொழிகளில் இப்படத்தை வெளியிட முடிவு செய்த நிலையில் தற்போது 38 மொழிகளில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்படத்தின் வேலைகள் நடந்து வருகிறது. சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில், ஒரு பாடலுக்காக, பிரம்மாண்டத்தை காண்பிக்க, லியோ பட்டத்தைப் போலவே ஆயிரம் ஆயிரம் கலைஞர்கள் தேவைப்பட்டனராம்.

#image_title

ஆனால் லியோ படத்தில் வந்த பிரச்னையை கருத்தில் கொண்டு, திறமையான 100 கலைஞர்களை மட்டுமே வைத்து படப்பிடிப்பை முடித்து, IMAGE CLONING என்ற தொழில் நுட்பம் மூலம் அவர்களை பெருக்கி, 2000 பேர் ஆடுவது போன்று காண்பித்து இருக்கிறார்கள். இந்தப் பாடல் சூர்யாவின் அறிமுகப்பாடலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

author avatar
Archana
Continue Reading

More in TRENDING

To Top