தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலஹாசன் முதலில் குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானது 1960 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் ஜெமினிகணேசன், சாவித்திரி ,மனோரம்மா போன்றவர்கள் நடித்துள்ள களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் தான். இந்தப் படம் சுமார் நூறு நாட்களுக்கும் மேல் ஓடியதோடு மட்டுமல்லாமல் தேசிய விருதும் பெற்றுள்ளது. குழந்தை நட்சத்திரமாக நடித்த கமலஹாசனிற்கும் விருது வழங்கபட்டது.
இதனைத் தொடர்ந்து ஏவிஎம் குமரன் களத்தூர் கண்ணம்மா படம் 100 நாட்கள் சென்னை மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது .ஆகையால் அந்த வெற்றியை ரசிகர்களோடு இணைந்து திரையரங்குகளிலேயே வைத்து கொண்டாட படக்குழுவினர்களுடன் சேர்ந்து செல்ல முடிவெடுத்தனர். மேலும் ஜெமினி கணேசன் சாவித்திரி இருவரும் தியேட்டரின் உள்ளே வரும்போது கைத்தட்டலும் விசில் சத்தமும் பலமாக இருந்தது.
அதன் பின்பு இப்பொழுது கமலஹாசன் உங்கள் முன் வரப் போகிறார் என்று கூறியதும் அவர் மேடைக்கு வரும் பொழுது அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் ஒளிபரப்பானது. இந்தப் பாடலில் அவர் அணிந்திருந்த கிழிந்த சட்டையுடன் கமல் உள்ளே வந்ததும் மக்கள் எழுந்து நின்று கைதட்டி கூச்சலிட்டனர். இந்த வரவேற்பு ஜெமினிகணேசன் சாவித்திரிக்கு கிடைத்ததை விட மிக அதிகமாகவும் ஆரவாரத்துடனும் இருந்தது.
மேலும் அடுத்த தியேட்டருக்கு செல்லும் பொழுது ஜெமினி கணேசன் சாவித்திரி இருவரும் தனது சொந்தக்காரிலேயே வந்துவிடுவார்கள். மற்றவர்கள் வேனில் சென்றனர் . இந்த முறையும் கமலுக்கு கிடைத்த வரவேற்பு ஜெமினி கணேசன் மனதில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆகவே ஜெமினி கணேசன் மூன்றாவதாக செல்லயிருந்த திரையரங்கிற்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி ஏவிஎம் குமரன் விசாரித்த போது கமலை விட தமக்கு வரவேற்பு மரியாதையும் குறைவாக இருப்பதாக கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…