இனி இவர்களுக்கெல்லாம் பணம் கிடையாது?.. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய ரூல்ஸ்..!

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான குடும்பத் தலைவிகள் பயனடைத்து வருகின்றனர். முதலில் இந்த திட்டத்தில் குடும்பத் தலைவிகள் பலருக்கும் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படாத நிலையில் புகார் எழுந்தது. பிறகு அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைத்து வருகிறது. தற்போது தகுதியுள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் தோறும் பணம் வழங்கப்பட்டு வருகின்றது.

இப்படியான நிலையில் குடும்ப தலைவிகளுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் சில குடும்பத் தலைவிகளின் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் குடும்பங்களை சேர்ந்த பெண்களின் பெயர் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்படும். திருமணம் ஆகாத மகன் அல்லது மகள் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு பணிகளில் சேர்ந்திருந்தால் அந்த குடும்பத்தை சேர்ந்த குடும்பத்தலைவி இந்த திட்டத்தில் இனி பயனாளியாக இருக்க முடியாது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற திருமணமான பெண்களும் இந்த திட்டத்தில் பயனாளியாக இருந்தால் அவர்களின் பெயர் நீக்கப்படும். அந்த வகையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

6 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago