கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு மாதிக்காவிலையை சேர்ந்தவர் தேவராஜ் என்பவர். இவருக்கு மரிய ஜோய் (67) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் சந்தோஷ்குமார் மனைவிக்கும் மாமியார் மரிய ஜோய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வழக்கம் போல தகராறு ஏற்பட ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மருமகள் மாமியாரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு அடுப்பிலிருந்து வெந்நீரை எடுத்து அவர் மீது ஊற்றியுள்ளார்.
மேலும் ஆத்திரம் அடங்காமல் கையால் முதுகில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த மாமியாரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்பத் தகராறில் மாமியார் மீது மருமகள் வெந்நீர் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும், ஆட்சி அமைப்பதில்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…
சேலம் மேற்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அருள், தேர்தலில் தோல்வியுற்ற பிறகு தனது வாழ்வாதாரப் பணிகளுக்குத் திரும்பியுள்ளதாகச் சமூக வலைதளங்களில்…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில், புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பைக்…