பழைய ஃபார்முக்கு திரும்பிய காஜல் அகர்வால்.. இணையத்தை கலக்கும் வைரல் போட்டோஸ்..!!

By Mahalakshmi on ஏப்ரல் 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் திரையுலகிற்கு 2004 ஆம் ஆண்டு அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான பழனி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

   

பின்னர் பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார். தற்போது இந்தியன் 2 திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

   

 

கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் பிறந்திருக்கின்றார்.

குழந்தை பிறந்த பிறகு வெயிட் போட்டிருந்த காஜல் அகர்வால் பின்னர் கடகடவென தனது வெயிட்டை குறைத்து பத்து வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதேபோல மாறி இருக்கிறார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய காஜல் அகர்வால் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.