Connect with us

CINEMA

எம் ஜி ஆர், SS ராஜேந்திரனுக்கு முன்பே சட்டமன்றத்துக்குள் சென்ற பிரபல நடிகை.. பலரும் அறியாத தகவல்..

தமிழ் சினிமாவையும் தமிழக அரசியலையும் தனித்தனியாக எப்போதும் பிரிக்க முடியாது. அந்த அளவுக்கு இன்றுவரை இரண்டும் ஒன்றோடு ஒன்றாக கலந்துள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து தமிழகத்துக்கு இதுவரை ஐந்து அண்ணாதுரை, கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா மற்றும் வி என் ஜானகி என இதுவரை ஐந்து முதல்வர்கள் கிடைத்துள்ளனர்.

இதுதவிர அரசியலுக்கு வந்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக சில ஆண்டுகள் இருந்தார். இவர்கள் தவிர சமீப காலத்தில் ராமராஜன், டி ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், சீமான் என தமிழ் சினிமாவில் இருந்து பலர் அரசியலுக்கு வந்துள்ளனர். சமீபத்தில் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

   

இப்படி பலர் தமிழக அரசியலில் பல திரைக்கலைஞர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளியாக இருந்தது யார் என்று தெரியுமா? அது இதுவரை பலரும் அறியாத தகவல். தமிழ் சினிமாவில் தன்னுடைய கந்தர்வக் குரலால் மயக்கிய மறைந்த நடிகை கே பி சுந்தராம்பாள்தான் அது.

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்ட அவர் மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் விடுதலை போராட்டம், கதர் சட்டை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக நடித்துள்ளார். நாடு விடுதலை பெற்ற பின்னர் காங்கிரஸில் தீவிரமாக இயங்கிய அவருக்கு காமராஜர் ஆட்சியில் 1958 ஆம் ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் சட்டமன்றத்தில் நுழைந்த முதல் தென்னிந்திய திரைக்கலைஞர் என்ற பெருமையை கே பி சுந்தராம்பாள் பெற்றார். அவருக்கு பின்னரே திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக எஸ் எஸ் ராஜேந்திரன், கலைஞர் கருணாநிதி மற்றும் எம் ஜி ஆர் ஆகியோர் சட்டமன்றத்துக்குள் நுழைந்தனர். இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு முன்பே நடிகர் ஒருவரை சட்டமன்றத்துக்கு அனுப்பிய கட்சி காங்கிரஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Continue Reading

More in CINEMA

To Top