Categories: சினிமா

ஜெயலலிதா அழகின் ரகசியம் என்ன…? அவரே சொன்ன Cleopatra Style அழகு குறிப்பு…

Spread the love

ஜெயலலிதா தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருந்தவர் மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக சிறப்பாக ஆட்சி நடத்தியவர். மைசூர் மாவட்டம் மாண்டியாவில் பிறந்த ஜெயலலிதா இவரது 2 வயதில் தந்தை காலமானதால் தாயார் வேதவல்லியுடன் சென்னைக்கு குடி பெயர்ந்தார். இவரது தாய் வேதவல்லி சந்தியா என பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் சில வருடங்கள் நடித்தார்.

அதன் மூலம் ஜெயலலிதாவுக்கு 17 வயதாகும் போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான ஜெயலலிதா அதற்குப் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஜெயலலிதா எம்ஜிஆர் உடன் இவர் இணைந்து நடித் ங்கள் எல்லாமே ஹிட்டுதான். கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற ஜெயலலிதா இதில் 28 படங்களில் எம்ஜிஆர் உடன் மட்டுமே இணைந்து நடித்திருக்கிறார்.

எம்ஜிஆர் அரசியல் கட்சி ஆரம்பிக்கவே சிறிது காலத்திற்கு பிறகு அவரது கட்சியில் இணைந்து பணியாற்றிய ஜெயலலிதா எம்ஜிஆர் மறைவுக்கு பின்பு கட்சியை கையகப்படுத்தி சிறப்பாக கட்சியை எடுத்து நடத்தி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக ஆறுமுறை பதவி வகித்துள்ளார். எம்ஜிஆரை போலவே ஜெயலலிதாவும் இறக்கும் வரையிலும் முதலமைச்சராகவே இருந்து மறைந்திருக்கிறார்.

நடிக்கும்போதும் அரசியலில் களமிறங்கிய போதும் அவ்வபோது ஜெயலலிதா நேர்காணலில் கலந்து கொள்வது உண்டு. அப்போது அவரது அழகின் ரகசியம் என்ன என்று கேட்ட தொகுப்பாளர் இடம் தன் அழகிற்காக பராமரிக்கும் வீட்டு முறைகளை அவர் பகிர்ந்து இருக்கிறார். அதை Cleopatra Style என்றும் அவர் பகிர்ந்து இருக்கிறார். ஏனென்றால் கிளியோபட்ரா இயற்கையான பொருட்களை வைத்து அழகை பராமரித்து இருக்கிறார்.

அதேபோல் ஜெயலலிதா அவர்களும் கிளியோபட்ரா பாலில் குளிப்பது போல் வெண்ணையை உடல் முழுவதும் தடவி ஊறிய பிறகு பயித்த மாவை வைத்து தேய்த்து குளிப்பாராம். பின்னர் முகம் பளபளவென்று இருப்பதற்காக விளக்கெண்ணெய் முகத்தில் தேய்த்து ஊறிய பிறகு பாசிப்பருப்பை அரைத்து பூசி கழுவுவாரம். இது மட்டுமில்லாமல் அனைவரும் ஆணும் பெண்ணும் அழகாக இருப்பதற்கு முதலில் மனதில் கெட்ட எண்ணம் குழப்பமில்லாமல் இருந்தாலே முகம் பொலிவாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார் ஜெயலலிதா.

admin

Recent Posts

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

20 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

22 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

25 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

39 minutes ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

46 minutes ago

BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…

49 minutes ago