#image_title
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியாலிலும் சரி சினிமாவிலும் சரி தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் MGR.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் நடிகராக உயர்ந்து சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார் MGR. இவரது திரைப்படங்களில் ஆக்சன் காட்சிகள் திராவிட சிந்தனைகள் சமூக நீதி கருத்துக்கள் அதிகமாக இருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.
தான்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR நடிக்கும் போது திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் தனியாக கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக சிறப்பாக ஆட்சி நடத்தினார் MGR .
தான் இறக்கும் வரையிலும் முதலமைச்சராகவே இருந்து மறைந்திருக்கிறார் MGR. ஆனால் MGR நல்ல மனிதர் மட்டுமல்ல வாரி கொடுக்கும் வள்ளல் உதவும் மனப்பான்மை கொண்டவர் என்பதற்கு பல சம்பவங்கள் இருக்கிறது. அதில் ஒரு சம்பவத்தை இனி பார்ப்போம்.
மைசூரில் MGR மற்றும் அஞ்சலி நடித்த அரசிளங்குமாரி படத்தின் சூட்டிங் நடைபெற்றது. அப்போது எம்ஜிஆர் உடன் அவரது மனைவி ஜானகி அம்மாளும் நண்பர் ரவீந்தரும் வந்திருந்தனர். அவர்களும் சேர்ந்து ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர். ஷூட்டிங் முடித்து மைசூரை விட்டு கிளம்பும்போது எம்ஜிஆர் தாங்கள் தங்கி இருந்த அறைக்கு அவரே ஹோட்டலில் பணம் செலுத்தி விட்டு கிளம்பி இருக்கிறார்.
இதை பார்த்த தயாரிப்பாளர் பதற்றப்பட்டு எம்ஜிஆர் இடம் வந்து என்னங்கையா நான் பணம் கொடுத்து இருப்பேனே நீங்க எதுக்கு இப்படி பணம் கொடுத்தீங்க என்று கேட்டிருக்கிறார். அதற்கு எம்ஜிஆர் படம் விஷயமாக வந்திருந்தால் எனக்காக நீங்கள் கொடுக்கலாம் நான் குடும்பத்தோடு அல்லவா வந்திருக்கிறேன் அப்போது நான் தானே பணத்தை கட்ட வேண்டும் என்று சாதாரணமாக கூறிவிட்டு சென்றிருக்கிறார் எம்ஜிஆர். இதிலிருந்து அவர் எப்படிப்பட்டவர் எவ்வளவு கருணை உள்ளம் கொண்டவர் என்பது தெரிகிறது.
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…