கடிதத்தின் மூலம் மிரட்டல் விட்ட ரசிகருக்கு ஜெயலலிதா கொடுத்த ஷாக் பதில்.. புரட்சித் தலைவின்னா சும்மாவா..?

By John

Updated on:

Jayalalitha

அரசியல் உலகில் ஓர் அதிகாரம் மிக்க ஆளுமையாகத் திகழ்ந்தவர் இரும்புப் பெண்மணி ஜெயலலிதா என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் இவர் அரசியலுக்கு வந்த காலகட்டத்தில் சந்தித்த சோதனைகள் ஏராளம். வசதியான குடும்பத்தில் பிறந்து தன் தாய் மூலம் சினிமாத்துறைக்குள் நுழைந்து பின்னர் நாட்டையே ஆண்டவர் ஜெயலலிதா. தனது திரையுலகப் பயணத்தில் 127 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தவர். இதில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

59d56b7c41cb5dc47bc90a96379cfe7e

பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாயினர். அவற்றில் சில வெறித்தனமான ரசிகர்களும் இருந்தனர். இதனால் இவரது வீட்டிற்கு தினமும் ஏராளமான கடிதங்கள் வருமாம். அப்படி தான் திரையுலகில் உச்சத்தில் இருந்து போது ரசிகர் ஒருவர் எழுதிய லெட்டருக்கு ஜெயலலிதா கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

   

இவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது இவருக்கு ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார். அந்த நிலையில்தான் ஒரு ரசிகரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் ‘நான் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரு தேதியை குறிப்பிட்டு அந்த நாளுக்குள் நீங்கள் சம்மதிக்கவில்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என அவர் எழுதியிருந்தார். ஆனால் ஜெயலலிதா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

Jayalalitha
jayalalitha 1

பவதாரணிக்கு மருத்துவமனை என்றாலே பயம்.. இதனால், பல விஷயங்களை கணவரிடம் கூட சொல்லாம மறச்சிட்டாங்க.. வெளியான ஷாக்கிங் தகவல்..

சில நாட்கள் கழித்து அந்த ரசிகரிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது. ‘இந்த தேதிக்குள் என்னை நீங்கள் திருமணம் செய்ய நீங்கள் சம்மதிக்க வேண்டும். இல்லையெனில் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என அவர் எழுதியிருந்தார். ஜெயலலிதா அதற்கும் பதிலளிக்கவில்லை. சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு தேதியை குறிப்பிட்டு அந்த தேதிக்குள் சம்மதிக்கவில்லை எனில் தற்கொலை செய்துகொள்வேன் என அந்த ரசிகர் எழுதியிருந்தார்.

Jayalalitha
jayalalitha 2

இந்தமுறை அவருக்கு பதில் கடிதம் எழுதிய ஜெயலலிதா ‘எனக்கு கணவராக வருபவர் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவராக இருக்க வேண்டும். மற்ற விஷயங்களை விட கொடுத்த வாக்கை காப்பாற்றுவது முக்கியம். கொடுத்த வாக்கை காப்பாற்றமல் மீண்டும் மீண்டும் மீறும் உங்களை நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்’ என அவரின் பாணியிலேயே பதில் எழுதி பாடம் புகட்டினார் ஜெயலலிதா.

நடிப்பிலும் சரி, பொதுவாழ்விலும் சரி தன்னை எதிர்த்தவர்களை தனது ஆளுமையாலே அடக்கி ஆண்டு இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்தவர்தான் புரட்சித் தலைவி.