சமீபத்தில், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரணியில் இலங்கையில் உயிரிழந்தார். அதுகுறித்து பவதாரணியின் கணவர் சபரியின் அண்ணன் கண்ணன் நேர்காணலில் கூறியதாவது, பவதாரணி சத்தம் போட்டுக்கூட பேச மாட்டார். மிகவும் மென்மையானவர்.
அவரது இறப்பு எங்களால் தாங்க முடியாத ஒரு இழப்பாக இருக்கிறது. அவருக்கு இந்த புற்றுநோய் இருப்பதே எனக்கு டிசம்பர் 26 அன்றுதான் தெரிய வந்தது.அப்போதுதான் அவருக்கு உடம்புக்கு ரொம்பவும் முடியாமல் அப்பல்லோவில் அட்மிட் செய்து புல் செக்கப் செய்தது. அப்போதுதான் அவருக்கு இந்த நோய் இருப்பதே பேமிலியில் இருக்கிற எல்லோருக்கும் தெரிய வந்தது.
இந்த கல்லீரல் கேன்சர் என்பது வெளியே தெரியாது. 4வது ஸ்டேஜ் வரும்போதுதான் அதற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரிய வரும். பவதாரணிக்கு ஹாஸ்பிடல் என்றாலே பயம். ஹாஸ்பிடல் போறது, ஊசி மருந்து மாத்திரைகள் என்றாலே அவருக்கு அலர்ஜி. அதனால் உடல் ரீதியான சின்ன சின்ன பாதிப்புகள் வரும்போதே சொல்லி இருக்கலாம். அவர் பயந்துக்கொண்டு சொல்லாமல் விட்டிருக்கலாம்.
டாக்டர் என்றாலே பயம். அதனால் ஹாஸ்பிடல் சென்று வருவதை அவர் விரும்ப மாட்டார். அதனால் கணவரிடம் கூட அவர் சில விஷயங்களை சொல்லாமல் மறைத்து விட்டார். அவ்வப்போது வந்த சின்ன சின்ன பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட போது, அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட பின்புதான், முழு விவரங்களும் தெரிய வந்தது என்று கூறியிருக்கிறார் கண்ணன்.