கடவுளே.. இந்த வயசுல இப்டி நடக்கணுமா..?  பிரபல நடிகை மரணம்.. 32 வயதிலே உயிரை பறித்த கொடிய நோய்..

By Begam

Updated on:

பிரபல இன்ஸ்டாகிராம் சென்சேஷனல் மாடலும், கவர்ச்சி நடிகையுமான பூனம் பாண்டே உயிரிழப்பு ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள், அதிரடியான சவால்கள் என சோசியல் மீடியாவில் அவ்வப்போது பரபரப்பை கிளப்பி வந்தவர் நடிகை பூனம் பாண்டே.

   

இவர் ஹிந்தி திரையுலகில்  ‘நாஷா’ என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.  திரைப்படங்களைத் தாண்டி இவர் அதிகம் சர்ச்சைகளில் சிக்கியே மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். சாம் பாம்பே என்பவரை நடிகை பூனம் பாண்டே இரண்டு வருடங்களுக்கும் மேல் காதலித்து வந்தார். இதைத்தொடர்ந்து இவர்களிருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

ஆனால் தனது கணவர் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்கிறார் என்றும் காட்டு மிராண்டி போல டார்ச்சர் கொடுத்தார் என்றும் பரபரப்பு புகார் அளித்து காதலித்து திருமணம் செய்துக் கொண்ட கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். ஆபாச படங்களில் நிர்வாணமாக நடித்து வந்த நடிகை பூனம் பாண்டேவுக்கு  ஏகப்பட்ட பாய் ஃபிரெண்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆறு மாத காலமாக கர்ப்பவாய் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பூனம் பாண்டே சிகிச்சை பலனின்றி உத்தர பிரதேசத்தில் உள்ள தனது அம்மா வீட்டில் தங்கி இருந்தார். தற்பொழுது இவர் உயிரிழந்து விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது . 32  வயதில் கர்ப்பவாய் புற்றுநோய் காரணமாக நடிகை பூனம் பாண்டே உயிரிழந்திருப்பது அவரது  ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தற்பொழுது இவரின் மறைவிற்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.