Categories: சினிமா

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் MGR உடன் நடிக்க மறுத்த ஜெயலலிதா… ரொம்ப கோபக்காரங்களா இருப்பாங்க போலயே…

Spread the love

1965ம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர்.பந்துலு,  இயக்கத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த சூப்பர்  ஹிட் திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இத்திரைப்படத்தில் அறிமுக நடிகையாக கால் பதித்தார் ஜெயலலிதா. முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் மொத்தக் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் ஜெயலலிதா.

இத்திரைப்படம் ஒரு ராஜாங்கக் கதை.  அடிமைகளாக்கி விற்கும் அவலம். சர்வாதிகாரம் செய்யும் மன்னனை எதிர்த்து, குரல் கொடுக்கும் கூட்டத்துக்கு மருத்துவரான எம்ஜிஆர், உதவி செய்கிறார். எம்ஜிஆரின் காதலி தான் ஜெயலலிதா. இத்திரைப்படத்தில் வசனங்கள் அதைப்பற்றி சொல்லவே வேண்டாம் . ‘மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கேட்பார். ‘சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்பார் எம்ஜிஆர். படம் முழுக்க ‘பஞ்ச் வசனங்கள் பறந்துகொண்டே இருக்கும்.

இத்திரைப்படம் வெளியாகி 59 வருடங்களை கடந்தாலும், இன்று ஒளிபரப்பு செய்தால் கூட கலெக்‌ஷன் அள்ளும். கைத்தட்டலும் விசிலும் பறக்கும். தற்பொழுது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடிகை ஜெயலலிதா நடிக்க மறுத்த சுவாரசிய சம்பவம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது ,  அதாவது எப்பொழுதும் எம்ஜிஆர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும்பொழுது அனைவரும் எழுந்திருத்து மரியாதை செய்வார்கள். ஆனால் ஜெயலலிதாவை பொருத்தவரை அவர் எப்பொழுதும் படப்பிடிப்புக்கு சென்று நடித்துவிட்டு, பின்னர் வந்து புக் படித்துக் கொண்டிருப்பாராம்.

அப்படித்தான் அன்றைய படப்பிடிப்பிலும் தனது சூட்டிங் முடித்துவிட்டு புக் படித்துக் கொண்டிருந்தாராம். எம்ஜிஆர் வருவதை அவர் கவனித்துக் கொள்ளவில்லை.  இதனை ஒருவர் எம்ஜிஆரிடம் சென்று கூறவே அவர் சந்தியா என்பவரை அழைத்து, ‘அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்யும்போது அவர் மட்டும் அப்படி செய்தால் நன்றாக இருக்காது. அவரிடம் பக்குவமாக எடுத்துக் கூறுங்கள்’ என்று சொன்னாராம்.

உடனே சந்தியா, ஜெயலலிதா அவர்களிடம் கூற ஜெயலலிதா ‘நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும்..? எனக்கு மனசுக்கு புடிச்சவங்க மரியாதை செய்யணும் நினைக்கிறவங்களுக்கு மட்டும் தான் நான் எழுந்திருச்சு நிப்பேன்’ என்று சொல்லி கோபமாக கத்திவிட்டு ரூமுக்குள் சென்று கதவை தாள்போட்டுக் கொண்டாராம் .மறுநாள் 9 மணிக்கு படப்பிடிப்பு .ஆனால் ஜெயலலிதா வெளியே வரவே இல்லையாம். இயக்குனர் சென்று விசாரிக்க , ‘இல்ல சார். நான் படத்துல நடிக்கல’ என்று கூறி மறுத்துவிட்டாராம் .இதை தொடர்ந்து அவரை எப்படியோ சம்மதிக்க வைத்து படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள். இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்து அத்திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

Begam

Recent Posts

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

10 minutes ago

“அம்மா தான் என் தலைவி.. ஆனா ஓட்டு விஜய்க்கு!”… தவெக வேட்பாளருக்காகக் களமிறங்கிய ராமராஜன்… அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…

14 minutes ago

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் வேலை… டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…

14 minutes ago

சர்ச்சையில் சிக்கினார்..! “பாலியல் அத்துமீறல், போதைக் கலாச்சாரம்” முதல்வர் முன்னிலையிலேயே குண்டை தூக்கிப்போட்ட பிரேமலதா… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

19 minutes ago

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

25 minutes ago

“என் வாழ்க்கையே நரமாகிடுச்சு” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை 4-ம் மாடியிலிருந்து வீசிய மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…

32 minutes ago