1965ம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர்.பந்துலு, இயக்கத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இத்திரைப்படத்தில் அறிமுக நடிகையாக கால் பதித்தார் ஜெயலலிதா. முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் மொத்தக் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் ஜெயலலிதா.

இத்திரைப்படம் ஒரு ராஜாங்கக் கதை. அடிமைகளாக்கி விற்கும் அவலம். சர்வாதிகாரம் செய்யும் மன்னனை எதிர்த்து, குரல் கொடுக்கும் கூட்டத்துக்கு மருத்துவரான எம்ஜிஆர், உதவி செய்கிறார். எம்ஜிஆரின் காதலி தான் ஜெயலலிதா. இத்திரைப்படத்தில் வசனங்கள் அதைப்பற்றி சொல்லவே வேண்டாம் . ‘மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கேட்பார். ‘சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்பார் எம்ஜிஆர். படம் முழுக்க ‘பஞ்ச் வசனங்கள் பறந்துகொண்டே இருக்கும்.

இத்திரைப்படம் வெளியாகி 59 வருடங்களை கடந்தாலும், இன்று ஒளிபரப்பு செய்தால் கூட கலெக்ஷன் அள்ளும். கைத்தட்டலும் விசிலும் பறக்கும். தற்பொழுது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடிகை ஜெயலலிதா நடிக்க மறுத்த சுவாரசிய சம்பவம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது , அதாவது எப்பொழுதும் எம்ஜிஆர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும்பொழுது அனைவரும் எழுந்திருத்து மரியாதை செய்வார்கள். ஆனால் ஜெயலலிதாவை பொருத்தவரை அவர் எப்பொழுதும் படப்பிடிப்புக்கு சென்று நடித்துவிட்டு, பின்னர் வந்து புக் படித்துக் கொண்டிருப்பாராம்.

அப்படித்தான் அன்றைய படப்பிடிப்பிலும் தனது சூட்டிங் முடித்துவிட்டு புக் படித்துக் கொண்டிருந்தாராம். எம்ஜிஆர் வருவதை அவர் கவனித்துக் கொள்ளவில்லை. இதனை ஒருவர் எம்ஜிஆரிடம் சென்று கூறவே அவர் சந்தியா என்பவரை அழைத்து, ‘அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்யும்போது அவர் மட்டும் அப்படி செய்தால் நன்றாக இருக்காது. அவரிடம் பக்குவமாக எடுத்துக் கூறுங்கள்’ என்று சொன்னாராம்.

உடனே சந்தியா, ஜெயலலிதா அவர்களிடம் கூற ஜெயலலிதா ‘நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும்..? எனக்கு மனசுக்கு புடிச்சவங்க மரியாதை செய்யணும் நினைக்கிறவங்களுக்கு மட்டும் தான் நான் எழுந்திருச்சு நிப்பேன்’ என்று சொல்லி கோபமாக கத்திவிட்டு ரூமுக்குள் சென்று கதவை தாள்போட்டுக் கொண்டாராம் .மறுநாள் 9 மணிக்கு படப்பிடிப்பு .ஆனால் ஜெயலலிதா வெளியே வரவே இல்லையாம். இயக்குனர் சென்று விசாரிக்க , ‘இல்ல சார். நான் படத்துல நடிக்கல’ என்று கூறி மறுத்துவிட்டாராம் .இதை தொடர்ந்து அவரை எப்படியோ சம்மதிக்க வைத்து படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள். இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்து அத்திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.
