#image_title
தமிழ் சினிமாவின் கிளிண்ட் ஈஸ்ட்வுண்ட் என்று புகழப்பட்டவர் ஜெய்சங்கர். அந்த அளவுக்கு கௌபாய் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் 1965 ஆம் ஆண்டு இரவும் பகலும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆன இவர், சில படங்களில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகியோரோடு இணைந்தும் நடித்துள்ளார்.
அப்போது இருந்த சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக இருந்தவர் ஜெய்சங்கர். வாரா வாரம் இவர் படம் ஏதாவது ஒன்று ரிலீஸாகும் என்பதால் இவரை வெள்ளிக்கிழமை ஹீரோ என்ற் பத்திரிக்கைகள் அழைத்தன. அவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஜெய் சங்கருக்கு ரஜினி, கமல் ஆகியொரின் வரவுக்கு பிறகு மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்தது.
#image_title
இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏவிஎம் நிறுவனம் முதல்படமாக முரட்டுக்காளை படத்தை ரஜினியை வைத்து தயாரித்தது. இந்த படத்தை வித்தியாசமாக கமர்ஷியலாகக் கொண்டு செல்லவேண்டுமென ஏவிஎம் நிறுவனம் விரும்பியுள்ளது. அதனால் படத்தின் வில்லன் பவர்புல்லான ஒரு நடிகராக இருக்கவேண்டுமென முடிவு செய்துள்ளார்கள்.
அதற்காக அவ்வளவு நாட்கள் ஹீரோவாக நடித்து வந்த ஜெய்சங்கரை கேட்கலாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால் அவரிடம் இதைக் கேட்டால் அவர் கோபித்துக் கொள்வாரோ என்றும் தயங்கியுள்ளனர். ஏவிஎம் நிறுவனத்தின் சரவணன் நான் கேட்கிறேன் என்று ஜெய்சங்கரிடம் சென்று பேசியுள்ளார்.
அதற்கு ஜெய்சங்கர் “சார், உங்க கம்பெனில நான் பல படம் நடிச்சிருக்கேன். நீங்க என்ன எனக்கு கெட்டதா நினைக்கப் போறீங்க. கண்டிப்பா நடிக்கிறேன்” என சொல்லியுள்ளார். அந்த படமும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு ஜெய்சங்கர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் ஒரு கலக்கு கலக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.
வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள…
2026 ஐ.பி.எல். சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள்…
பெட்ரோல் பங்குகளில் நடக்கும் மோசடிகளை ஒரு இளம்பெண் தனது சமயோசித புத்தியால் அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்…
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலராலேயே…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய கடற்படையை…