ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய கடற்படையை முடக்கும் நோக்கில் அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிட மறுத்ததைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது கடுமையான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில், அமெரிக்கா தனது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலில் திடீரென 6,500 டன் எடையுள்ள அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைக் குவித்துள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலுக்குத் தேவையான தளவாடங்கள், ராணுவ லாரிகள் மற்றும் ஜேஎல்டிவி (JLTV) ரக வாகனங்கள் எனப் பிரம்மாண்டமான அளவில் இந்த ஆயுதங்கள் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் இஸ்ரேலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வுக்குப் பின்னால் ஈரானை அடிபணிய வைக்கும் மிகப்பெரிய வியூகம் இருப்பதாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவான ‘சென்ட்காம்’ (CENTCOM), ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து மின்னல் வேகத் தாக்குதலை நடத்தப் புதிய திட்டத்தை வகுத்துள்ளது. நீண்ட காலப் போராக இல்லாமல், குறுகிய காலத்தில் ஈரானின் ராணுவ பலத்தைச் சிதைப்பதன் மூலம், அந்த நாட்டை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதே அமெரிக்காவின் நோக்கம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த காலங்களில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா ஏற்கனவே இஸ்ரேலுக்கு லட்சக்கணக்கான டன் ஆயுதங்களை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்று வரும் இந்த ஆயுதக் குவிப்பு மற்றும் தளபதிகளுடன் அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் தீவிர ஆலோசனைகள், ஈரான் மீது எந்த நேரத்திலும் ஒரு பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…
வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள…
2026 ஐ.பி.எல். சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள்…
பெட்ரோல் பங்குகளில் நடக்கும் மோசடிகளை ஒரு இளம்பெண் தனது சமயோசித புத்தியால் அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்…