இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்து வருபவர் தான் கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா. மேகபந்துவீச்சாளரான இவர் பல தொடரின் வெற்றி நாயகனாக அங்கீகாரம் பெற்றுள்ளார். அதிலும் டி20 உலக கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருதை வென்ற முதல் பவுலர் என்ற உலக சாதனையை பும்ரா நிகழ்த்தி காட்டியுள்ளார். ஒரு டி20 உலக கோப்பையில் மிகவும் குறைந்த எக்னாமியை பதிவு செய்த சாதனையாளர் இவர்தான். இன்றைய கிரிக்கெட் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கண்பார்வையும் இவர் மீது விழுந்து உள்ள நிலையில் இவருடைய மனைவி பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
பும்ராவின் மனைவி பெயர் சஞ்சனா கணேசன். இவர் ஒரு ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையாளர் ஆவார். மேலும் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். சஞ்சனாவும் தன் கணவருடன் ஒப்பிடும்போது பிரபலமானவர் தான். கடந்த 2021 ஆம் ஆண்டு சஞ்சனா கணேசனை பும்ரா திருமணம் செய்து கொண்டார். கோவாவில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளும் அளவுக்கு மிக கட்டுப்பாடுகளுடன் அந்த கல்யாணம் நடைபெற்றது. சஞ்சனாவை பும்ரா ஒரு செய்தியாளராக சந்தித்தார். அதன் பிறகு மணவாழ்க்கை வரை இவர்களை அழைத்துச் சென்றது.
சஞ்சனா புனைவில் உள்ள சிம்பயோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இல் பி டெக் முடித்தவர். அதிலும் தங்கப்பதக்கம் தேர்ச்சி பெற்றவர். இவர் ஆரம்பத்தில் ஐடி நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்த நிலையில் சில காரணங்களால் வேலையில் இருந்து விலகினார். 2012 ஆம் ஆண்டு பெமினா ஸ்டைல்திவா, 2013ஆம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா ஆகிய அழகுப் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு இவர் தன்னை வளர்த்துக் கொண்டார். அந்த புகழ் வாழ்க்கை மட்டுமே சஞ்சனாவிற்கு சரியான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது. பிறகு ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளராக அவதாரம் எடுத்தார். 2014 ஆம் ஆண்டு எம் டிவி நடத்திய ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
இவர் 2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் ஐசிசி டி 20 உலகக்கோப்பை போன்ற பல்வேறு சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதன் மூலமாக பல வீரர்களை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு எளிமையாக கிடைத்தது. சஞ்சனாவின் நிகர சொத்து மதிப்பு எட்டு கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இவர் 20 முதல் 40 லட்சம் வரை சம்பளமாக வாங்கி வருகிறார். சஞ்சனா தன் கணவர் பும்ராவுடன் அகமதாபாத்தில் உள்ள ஒரு ஆடம்பர மாளிகையில் வாழ்ந்து வருகின்றார். இதனைத் தவிர மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 2 கோடி மதிப்புள்ள ஆடம்பர ஒரு வீடும் இவர்களுக்கு உள்ளது. மேலும் பல விலை உயர்ந்த சொகுசு கார்களையும் இந்த தம்பதியினர் வைத்துள்ளனர்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…