‘வாய்தா’ பட நடிகையான ஜெசிகா பௌலின் என்ற நடிகை தீபா தனது அபார்ட்மெண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ், வீடியோக்கள் என வெளியிட்டு அதன் மூலம் சிலர் பிரபலம் அடைகின்றனர். அதுபோல தான் வாய்தா பட வாய்ப்பு கிடைத்தது நடிகை ஜெசிகா பௌலினுக்கு. நடிகை ஜெசிக்கா யு டுயுப்பில் சிறு குறும் படங்களில் நடித்து தனது வெள்ளித்திரை பயணத்தை ஆரம்பித்தார். சிறுவயதிலிருந்தே நடிகை ஆக வேண்டும் என்பது அவரது கனவு.
இந்த கனவை நிறைவேற்றுவதற்காக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் சென்னை வந்து சேர்ந்தார். சென்னையில் எங்கெல்லாம் நடிகைகளுக்கான ஆடிஷன் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்தார். அப்படிகிடைத்தது தான்’ வாய்தா’ பட வாய்ப்பு.
திறமையான நடிகையான இவர் தைரியசாலியும் கூட. வாய்தா படத்திற்கு பின்னர் பிரபலம் அடைந்த இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். தற்பொழுது அவர் தனது அப்பார்ட்மெண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு காரணம் அவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடிக்க இருந்த படங்கள் கை நழுவி போனதாம்.
பட வாய்ப்புகள் கையை விட்டு நழுவிய காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த சமயத்தில் தனது காதலனும் தன்னை ஏமாற்றியதால் மனவிரக்தி அடைந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இவரின் நிறைவேறாத நீண்ட நாள் ஆசை ‘ஒரு சிறிய கார் வாங்க வேண்டும்’ என்பதாம். இந்த சிறிய ஆசை கூட நிறைவேறுவதற்கு முன்பே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருடைய இறப்பு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…