“சிறுமிகளின் பிறப்புறுப்பில் இருந்த காயம்”.. அடுத்தடுத்து நடந்த பாலியல் அத்துமீறல்கள்.. கொந்தளித்த பொதுமக்கள் தெருவில் இறங்கி போராட்டம்.. பதறும் தமிழகம்..!!

Spread the love

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஒரே நாளில் 12 வயது சிறுமி மற்றும் மூன்றரை வயதுக் குழந்தை என இரு சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை மற்றும் தொல்லை அளிக்கப்பட்ட கொடூரச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பொதுமக்களின் போராட்டத்தையும் வெடிக்கச் செய்துள்ளன. முதல் சம்பவத்தில், சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற மணி என்ற கூலித் தொழிலாளி, திரும்பும் வழியில் சிறுமிக்கு அந்தரங்க உறுப்புகளில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அச்சமடைந்த சிறுமி பெற்றோரிடம் கூற, தலைமறைவாக இருந்த மணியை நேற்று அதிகாலை உறவினர் வீட்டில் கண்டுபிடித்த பெற்றோரும் உறவினர்களும் அவரைச் சரமாரியாகத் தாக்கினர். பலத்த காயமடைந்த மணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குமாரபாளையம் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மற்றொரு அதிர்ச்சிச் சம்பவமாக, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் அஜித் குமார் என்பவரது வீட்டிற்கு வந்திருந்த அவரது உறவினரின் மூன்றரை வயதுக் குழந்தை, மாலையில் விளையாடிவிட்டுத் திரும்பியதும் பிறப்புறுப்பில் வலிப்பதாகக் கூறியுள்ளது. பதறிய பெற்றோர்கள் குழந்தையைக் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் உடனடியாகக் களமிறங்கிய போலீசார், அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் வரதராஜ் என்பவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மூன்றரை வயதுக் குழந்தையைச் சீரழித்த வரதராஜைக் காவல் நிலையம் அழைத்து வந்ததை அறிந்த சிறுமியின் உறவினர்களும் பொதுமக்களும் காவல் நிலையத்தின் முன்பு திரண்டு, குற்றவாளியைத் தங்ளிடம் ஒப்படைக்குமாறு கூறி தாக்க முற்பட்டனர். ஆய்வாளர் குற்றவாளியைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயன்றபோது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குமாரபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதுடன், இரு குழுக்களாகப் பிரிந்து காவல் நிலையம் முன்பும், பள்ளிபாளையம் பிரிவு சாலையிலும் அதிரடியாகச் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்தே பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

Muthu Mani

Recent Posts

“அக்கா வீட்டிற்கு சென்ற மனைவி….” தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொடூரம்…. கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை… பகீர் சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…

11 minutes ago

மரத்தின் மீது மோதி கவிழ்ந்த பள்ளி வேன்…. அலறி துடித்த பள்ளி மாணவர்கள்…. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…

1 மணத்தியாலம் ago

“உங்க ஸ்பேஸ் டெக்னாலஜியை பாருங்க…” நடுரோட்டில் மெகா பள்ளம்… பைக்குடன் பாய்ந்த டெலிவரி பாய்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…

1 மணத்தியாலம் ago