திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிவகிரிபட்டி ஊராட்சி பாண்டியன் நகரைச் சேர்ந்த காளீஸ்வரி (34) என்ற பெண், கள்ளக்காதல் தகராறில் தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காளீஸ்வரியின் கணவர் கருப்பசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால், அவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், வேலைக்குச் சென்ற இடத்தில் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மகுடேஸ்வரன் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. மகுடேஸ்வரன் காளீஸ்வரியை கவுண்டம்பாளையம் பகுதியில் வீடு எடுத்துத் தங்க வைத்து, அவ்வப்போது அங்கு வந்து தனிமையில் இருந்துள்ளார்.
இதற்கிடையில், காளீஸ்வரிக்கு அதே பகுதியைச் சேர்ந்த குரு என்பவருடனும் பழக்கம் ஏற்பட்டு, இருவருடனும் மாறி மாறித் தனிமையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தை அறிந்த வீட்டின் உரிமையாளர் காளீஸ்வரியைக் கண்டித்ததால், அவர் மகுடேஸ்வரனை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியிலேயே சந்தித்துப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காளீஸ்வரியைச் சந்திக்க வந்த மகுடேஸ்வரன், அவரை வீட்டிற்கு அருகில் உள்ள புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்துள்ளார். அப்போது குருவுடனான பழக்கம் குறித்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னை விட்டுவிட்டு வேறு யாருடனும் பழகக் கூடாது என்றும், தன்னுடன் மட்டுமே வாழ வேண்டும் என்றும் மகுடேஸ்வரன் வற்புறுத்தியதை காளீஸ்வரி மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த மகுடேஸ்வரன், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து காளீஸ்வரியின் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி போலீசார், காளீஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகப் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தேடி வந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் மகுடேஸ்வரனைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதல் தகராறில் காளீஸ்வரியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, போலீசார் மகுடேஸ்வரனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மாநிலங்களவை (ராஜ்யசபா)…
மனித உருவில் வந்த அரக்கனான வளர்ப்புத் தந்தையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த…
மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்…
டெல்லி மாளவியா நகரிலுள்ள 'புளோரிஷ் ஸ்டே' (Flourish Stay) என்ற விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குருகிராமைச் சேர்ந்த…
இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வெறும் சில லைக்குகளுக்காகவும் (Likes), தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் பலரும்…
சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் (Town Planning Department) நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட…