குஜராத்தின் சூரத் நகரத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், 10 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டவருமான 47 வயதான சிம்ரன் பட்டேல், மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக சூரத் சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு முதல் நாள் அன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சர்ச்சைக்குரிய வீடியோவைப் பதிவேற்றியிருந்தார்.
அந்த வீடியோவில், சிம்ரன் பட்டேல் ரூ 500 ரூபாய் நோட்டைத் தனது ஆடைக்குள் திணித்தபடி “ஹேப்பி பர்த்டே காந்திஜி” என்று பாடுகிறார். மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டை ஆபாசமாகவும், கண்ணியக் குறைவாகவும் சித்தரிக்கும் வகையில் அவரது அசைவுகள் அமைந்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது.
‘கோ ரக்ஷா மஞ்ச்’ அமைப்பின் தலைவரான தர்மேஷ் காமி அளித்த புகாரின் பேரில், சூரத் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி, தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம், 2008-ன் பிரிவு 67-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், சமூக வலைதளங்களில் பிரபலம் மற்றும் லைக்குகளுக்காக தேசியத் தலைவர்களையோ, மத மற்றும் சமூகச் சின்னங்களையோ இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிடக் கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…
ஆளுங்கட்சியின் நிர்வாக திறனின்மையை மூடிமறைக்கவே எதிர்க்கட்சிகள் மீது வீண் பழிகளைச் சுமத்துவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.…