உத்தராகண்ட் மாநிலத்தின் தியூனி பகுதியில் குறுகிய மலைப்பாதையில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர சம்பவத்தில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் இருவர் படுகாயமடைந்தனர். விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு காரின் டேஷ்கேமில் பதிவான பயங்கரக் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
காரின் டேஷ்கேம் காட்சிகளின்படி, காரில் உரத்த இசையுடன் பயணிகள் ஆபத்தான முறையில் மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். பின்னால் வந்த வாகனம் வழி கேட்டபோதும், அதை முந்த விடாமல் காரின் வேகத்தை அதிகரிக்குமாறு ஓட்டுநரை பயணிகள் தூண்டியுள்ளனர். தொடர்ந்து அதிவேகத்தில் சென்றபோது, பின்னால் இருந்து மற்றொரு வாகனம் மோதியது போன்ற சத்தம் கேட்டு ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின் கம்பத்தில் மோதிப் பள்ளத்தாக்கில் விழுந்தது தெரியவந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினரும் காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் உயிரிழந்தவர் துர்கேஷ் சௌத்ரி (39) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தீவிர காயமடைந்த சுனில் மண்டல் (27) மற்றும் ரிஷப் ஆகிய இருவரை மீட்புக் குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…