அட கொடுமையே… லைக்ஸுக்காக இப்படியா?… ஹேப்பி பர்த்டே காந்திஜி… 500 ரூபாய் நோட்டுடன் ஆபாச வீடியோ போட்ட… இன்ஃப்ளூயன்ஸர் அதிரடி கைது…!

By Swetha on ஐப்பசி 6, 2026

Spread the love

குஜராத்தின் சூரத் நகரத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், 10 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டவருமான 47 வயதான சிம்ரன் பட்டேல், மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக சூரத் சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு முதல் நாள் அன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சர்ச்சைக்குரிய வீடியோவைப் பதிவேற்றியிருந்தார்.

அந்த வீடியோவில், சிம்ரன் பட்டேல் ரூ 500 ரூபாய் நோட்டைத் தனது ஆடைக்குள் திணித்தபடி “ஹேப்பி பர்த்டே காந்திஜி” என்று பாடுகிறார். மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டை ஆபாசமாகவும், கண்ணியக் குறைவாகவும் சித்தரிக்கும் வகையில் அவரது அசைவுகள் அமைந்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது.

   

‘கோ ரக்ஷா மஞ்ச்’ அமைப்பின் தலைவரான தர்மேஷ் காமி அளித்த புகாரின் பேரில், சூரத் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி, தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம், 2008-ன் பிரிவு 67-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், சமூக வலைதளங்களில் பிரபலம் மற்றும் லைக்குகளுக்காக தேசியத் தலைவர்களையோ, மத மற்றும் சமூகச் சின்னங்களையோ இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிடக் கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.