டாக்டர், நர்ஸ் இல்லை… கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆயாம்மாக்கள்… குழந்தை பரிதாப பலி… பெயருக்குத்தான் 24 மணி நேர மருத்துவமனையா..? தவெக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்..!!

Spread the love

சென்னை கண்ணகி நகர் அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நேரத்தில் பிரசவ வலியோடு வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு அங்கே ஹவுஸ் கீப்பிங் வேலை பார்க்கும் ஆயாம்மாக்கள் சிகிச்சை பார்த்ததால் குழந்தை உயிரிழந்து பிறந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரது மனைவி மெர்சிக்கு நேற்று இரவு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை கண்ணகி நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, அங்கு தகுதியான மருத்துவர்களோ செவிலியர்களோ இல்லை எனக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ஆயாம்மாக்கள் இருவர், கையுறை அணிந்துகொண்டு மெர்சிக்குச் சோதனை செய்ததோடு, வெறும் வலி நிவாரண மாத்திரைகளை மட்டும் கொடுத்து அலட்சியமாகச் செயல்பட்டுள்ளனர்.

அதன் பின்னர், தீவிரமடைந்த வலியுடன் திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு மெர்சி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசரப் பிரிவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்பட்ட போது, அந்தக் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குழந்தையின் தாய் மெர்சி தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையின் இந்த அதீத அலட்சியத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து, கண்ணகி நகர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுச் சாலையில் அமர்ந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தவெக சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ சரவணமூர்த்தியைச் சூழ்ந்துகொண்ட பொதுமக்கள், கடந்த மாதம் இந்த மருத்துவமனையை ஆய்வு செய்துவிட்டுச் சென்ற நீங்கள், உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று ஒரு குழந்தை இறந்திருக்காது எனச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் எம்.எல்.ஏ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 24 மணி நேர மருத்துவமனை என்று பெயருக்கு மட்டுமே இயங்கும் இந்த மையத்தில் தகுதியான பயிற்சி பெற்ற மருத்துவர்களை உடனடியாகப் பணியமர்த்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago