பகீர்..! ரொட்டி சுடும்போது வெடித்த இண்டக்ஷன் அடுப்பு… சிதறிய கண்ணாடித் துண்டுகள்… சமையலறையில் நிகழ்ந்த திக் திக் வீடியோ..!

Spread the love

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பலரும் மின்சாரத்தில் இயங்கும் இண்டக்ஷன் அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பெண் ஒருவர் இண்டக்ஷன் அடுப்பில் ரொட்டி சுட்டுக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக அந்த அடுப்பு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறுகிறது. அந்த நேரத்தில் அருகில் ஒரு குழந்தையும், வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரும் இருந்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றாலும், அடுப்பின் மேலிருந்த கண்ணாடித் தட்டுகள் சுக்குநூறாக உடைந்து சிதறின. இதேபோல மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹேமா ஜாட் என்ற பெண்ணுக்கும் இண்டக்ஷன் அடுப்பு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. மலிவு விலையில் கிடைக்கும் தரம் குறைந்த இண்டக்ஷன் அடுப்புகளைப் பயன்படுத்துவதே இத்தகைய விபத்துக்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

தரமான பாதுகாப்பு சோதனைகள் இன்றி சந்தையில் விற்கப்படும் சில அடுப்புகள், அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டிருக்கவில்லை. எனவே, நுகர்வோர் இண்டக்ஷன் அடுப்புகளை வாங்கும் போது, குறைந்த விலைக்கு ஆசைப்படாமல் நம்பகமான பிராண்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு தரச் சான்றிதழ் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Soundarya

Recent Posts

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

16 minutes ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

25 minutes ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

53 minutes ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

1 மணத்தியாலம் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

1 மணத்தியாலம் ago

“18 இடங்களில் எலும்பு முறிவு… கோமாவில் தள்ளப்பட்ட பெண் ஆசிரியர்…” விபத்தில் கணவர் பலி… ஒரே நொடியில் சிதைந்த குடும்பம்…. பயங்கர சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…

1 மணத்தியாலம் ago