“நெல்லை டூ சாத்தூர்.. கோவை தெற்கு டூ வடக்கு… பாஜக தலைவர்களின் தொகுதிகள் மாற்றப்பட்டது ஏன்?… கசிந்த ரகசிய தகவல்….!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொகுதிகள் ஒதுக்கீட்டில் பெரும் மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த தேர்தல்களில் பாஜகவின் முக்கிய முகங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்லது கணிசமான வாக்குகள் பெற்ற திருநெல்வேலி (நயினார் நாகேந்திரன்), அரவக்குறிச்சி (அண்ணாமலை), மற்றும் தாராபுரம் (எல். முருகன்) ஆகிய தொகுதிகள் இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக, அண்ணாமலை போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சிங்காநல்லூர் தொகுதியும் அதிமுக வசமே தங்கியுள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பாஜகவின் தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசன் தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் கோவை தெற்கு தொகுதியும் இந்த முறை பாஜகவுக்கு வழங்கப்படவில்லை; அதற்குப் பதிலாக கோவை வடக்கு தொகுதியை பாஜக கேட்டுப் பெற்றுள்ளது. அதேபோல், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த காலங்களில் போட்டியிட்ட வேளச்சேரி, விருகம்பாக்கம் தொகுதிகளும் கைகூடி வரவில்லை. இருப்பினும், அவர் இந்த முறை மைலாப்பூர் தொகுதியில் களம் காண வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் மூத்த தலைவர்களின் தொகுதிகள் மாற்றப்பட்டது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தினாலும், இது திட்டமிட்ட வியூகமாகவே பார்க்கப்படுகிறது.

இந்தத் தொகுதி மாற்றங்களுக்குப் பின்னால் வெற்றி வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட பாஜகவின் சொந்தத் தேர்வுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. மற்றொருபுறம், மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளதாலும், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தேசிய அரசியலில் கவனம் செலுத்த விரும்புவதாலும் அவர்கள் சட்டமன்றத் தேர்தல் களத்தில் இருந்து விலகியிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Muthu Mani

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

1 மணத்தியாலம் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

1 மணத்தியாலம் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

2 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

2 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

2 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago