பள்ளிக்கூடமா..? பாலியல் கூடமா..? 10-ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் பாலியல் அத்துமீறல் – சிசிடிவியில் சிக்கிய “காமக் கொடூரனின்” லீலைகள்..!!

Spread the love

தெலங்கானா மாநிலம் நாராயணன்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில், கணினி ஆய்வகத்தில் (Computer Lab) 10-ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாராயணன்பேட்டை மாவட்டம் மாகனூர் மண்டலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கணினி ஆய்வகத்தில் மாணவி தனியாக இருந்ததைக் கண்ட ஆசிரியர், அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். மாணவிக்கு அவர் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி என்பது குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டிய சூழலில், ஒரு ஆசிரியரே இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தனிமையில் இருக்கும் மாணவிகளிடம் ஆசிரியர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்வதை உறுதி செய்யக் கடுமையான விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Soundarya

Recent Posts

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

5 minutes ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

13 minutes ago

“18 இடங்களில் எலும்பு முறிவு… கோமாவில் தள்ளப்பட்ட பெண் ஆசிரியர்…” விபத்தில் கணவர் பலி… ஒரே நொடியில் சிதைந்த குடும்பம்…. பயங்கர சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…

22 minutes ago

“மடியில் அமர வைத்து… கழிவறைக்கு வந்தார்…” கேள்வித்தாள் வாங்க வந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு ஷாக்…. மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்…. பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…

36 minutes ago

“உடலில் தீப்பற்றி அலறியபடி ஓடிய காதலி…” பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து…! கள்ளக்காதலை துண்டித்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ்…! பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த…

51 minutes ago

“அம்மா அந்த சித்தப்பா என்னை..” 8 வயது சிறுமியை கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று…! விளையாட சென்ற போது அரங்கேறிய கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில…

1 மணத்தியாலம் ago