“இந்தியர்களே கவலை வேண்டாம்!”… நட்புக்கு கை கொடுத்த ஈரான்… ஹார்முஸ் ஜலசந்தி பதற்றத்திற்கு இடையே ஈரான் வெளியிட்ட உருக்கமான பதிவு…!!

Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது. சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் இந்த முக்கியமான பாதையில், இந்தியப் பயனாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. “எங்கள் இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளனர்” என சமூக வலைத்தள பக்கத்தில் ஈரான் உருக்கமான செய்தியைப் பகிர்ந்துள்ளது.

 கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து, ஹார்முஸ் ஜலசந்தியின் முழுக் கட்டுப்பாட்டை வைத்துள்ள ஈரான், அங்கு கப்பல் போக்குவரத்தைப் பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற குறிப்பிட்ட “நட்பு நாடுகளுக்கு” மட்டுமே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிநேர முடக்கம் உலக அளவில் எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ள போதிலும், 94,000 டன் எல்பிஜி ஏற்றி வந்த கப்பல்கள் உட்பட இதுவரை எட்டு இந்தியக் கப்பல்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளன.

 ஈரானின் உறுதிமொழிகளுக்கு இடையிலும், கள நிலவரப்படி இந்தியாவிற்கு எரிபொருளை ஏற்றி வரும் சுமார் 19 கப்பல்கள் இன்னும் அந்தப் பகுதியில் சிக்கியுள்ளன. இதில் இந்தியக் கொடியிடப்பட்ட 9 கப்பல்களும், இந்தியாவுக்காக எரிசக்தித் தேவைகளை சுமந்து வரும் 10 வெளிநாட்டு கப்பல்களும் அடங்கும். குறிப்பாக, கச்சா எண்ணெய், எல்பிஜி மற்றும் எல்என்ஜி ஏற்றி வரும் இந்தக் கப்பல்கள் ஜலசந்தியில் முடங்கிக் கிடப்பது இந்திய எரிசக்தி சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“இதோ நான் வந்துட்டேன்….” வெள்ளத்தில் தவித்த மனிதன்… காப்பாற்ற ஓடிவந்த யானை…! சமூக வலைதளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

ஆபத்தான வெள்ள நீரில் சிக்கி கரை சேர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த மனிதர் ஒருவரை, யானை ஒன்று கவனித்து அவரிடம்…

3 minutes ago

“ரீல்.. ரீல் கட் ஆகிடும் சார்”…. சட்டமன்றத்தில் எ.வ.வேலு செஞ்ச அந்த சைகை…. CM விஜய் ரியாக்‌ஷன் வைரல்…!

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கத் தங்களுக்கும் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில்…

5 minutes ago

கடுமையான அதிகாரிகள்… நச்சரிக்கும் விற்பனையாளர்கள்… வெளிநாட்டவரை முகம் சுளிக்க வைத்த டெல்லி ஏர்போர்ட்… அமெரிக்கர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!!

டெல்லி விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் டியூட்டி-ஃப்ரீ கடைகள் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த டாமன் சும்ப்ரோகல் என்ற கட்டிடக் கலைஞர்…

7 minutes ago

நைட்டி போட்டது ஒரு குத்தமா?… பிக் பாஸ் காமன் மேன் மரண ரோஸ்ட்… மாயாவை பதறவிட்ட கோபி – சுதாகர்… ட்ரெண்டாகும் ட்ரோல் வீடியோ…!!

பிக் பாஸ் சீசன் 10 தொடங்குவதற்கு முன்பாக தற்போது ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் காமன் மேன்' தேர்வு நிகழ்ச்சி…

14 minutes ago

அவங்க முகத்தை பார்த்து கூட மனசு மாறவில்லையா…? “பெற்ற பிள்ளைகளின் கழுத்தை அறுத்த தாய்…” அமெரிக்காவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

அமெரிக்காவின் நார்த் டகோட்டா மாநிலத்தில் உள்ள மேண்டன் பகுதியில், தாய் ஒருவர் தனது சொந்தக் குழந்தைகள் மூவரின் கழுத்தை அறுத்த…

19 minutes ago

இது தான் உண்மையா..! காமன் மேன் பெயரில் ஏமாற்று வேலையா?… பிக் பாஸ் சீசன் 10 ஆடிஷன் குறித்து மாயா நாட்டாசன் பகிரங்கக் குற்றச்சாட்டு…!!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல்முறையாகச் சாமானிய மக்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில்…

25 minutes ago