நைட்டி போட்டது ஒரு குத்தமா?… பிக் பாஸ் காமன் மேன் மரண ரோஸ்ட்… மாயாவை பதறவிட்ட கோபி – சுதாகர்… ட்ரெண்டாகும் ட்ரோல் வீடியோ…!!

Spread the love

பிக் பாஸ் சீசன் 10 தொடங்குவதற்கு முன்பாக தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் காமன் மேன்’ தேர்வு நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. தன்னை ஒரு சாமானியப் பெண்ணாக காட்டிக்கொள்ள நைட்டி அணிந்து வந்த ஒருவரை, இடத்திற்கு ஏற்ற உடை இதுவல்ல என நடுவர்களான ஆரியும் மாயாவும் கடுமையாக விமர்சித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அந்தப் பெண், அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கிடையே, நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்றுவதற்காக மட்டுமே பொதுமக்களை அழைத்து வந்து டாஸ்க் என்ற பெயரில் அலைக்கழிப்பதாகவும், உண்மையான போட்டியாளர்கள் முன்பே தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பிரபல யூடியூப் சேனலான ‘பரிதாபங்கள்’ குழு, பிக் பாஸ் நடுவர்களைத் தங்களது பாணியில் கடுமையாக கலாய்த்துள்ளனர். அந்த வீடியோவில் நைட்டி அணிந்து வரும் கோபி, அது பெரும்பாலான இல்லத்தரசிகளின் அன்றாட உடை என்றும், அதனை ‘தேசிய உடை’ என வேடிக்கையாகக் கூறி நடுவர்களின் பேச்சை விமர்சித்துள்ளார். மேலும், சாதாரண மக்களின் ஆசைகளைத் தூண்டிவிட்டு, அவர்களை மேடைக்கு அழைத்து வந்து அவமானப்படுத்துவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமா என மிக ஆழமான கேள்விகளையும் நகைச்சுவை கலந்த ட்ரோல் மூலம் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த வீடியோவில் நைட்டி விவகாரத்தை மட்டுமின்றி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாகக் காணப்படும் கெட்ட வார்த்தைப் பயன்பாடு, மற்றவர்களைத் தூண்டிவிடுவது, குழுவாகச் செயல்படுவது, மற்றும் கொடுமைப்படுத்துவது போன்ற பல விஷயங்களையும் கோபியும் சுதாகரும் வறுத்தெடுத்துள்ளனர். இத்தகைய ஆங்கில வார்த்தைகளைத் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே பிக் பாஸ்தான் என அவர்கள் விமர்சித்திருப்பது பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த நையாண்டி வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், சாமானிய மக்கள் கேட்க நினைத்த கேள்விகளை நெத்தியடியாகக் கேட்டதற்காகப் பரிதாபங்கள் குழுவிற்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

Gayathri

Recent Posts

குடும்பத்தைக் காப்பாற்ற உழைத்த பெண்… இரவு 10 மணிக்கு அரங்கேறிய  கொடூரம்… காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. பகீர் சம்பவம்…!!

தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இரவு நேரத்தில் உணவு அல்லது பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊழியர்…

8 minutes ago

சீச்சீ… இதை எப்படி சாப்பிடுறது…? கால்களால் மிதித்து மாவு பிசையும் தொழிலாளர்கள்…. இணையத்தில் கண்டனத்தை குவிக்கும் வீடியோ…!!

உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…

31 minutes ago

“தவெகவில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்?”… கொளுத்திப் போட்ட செங்கோட்டையன்… குதிரை பேரம் நடப்பது உண்மை தானா?… போட்டுத் தாக்கிய விசிக….!

தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…

45 minutes ago

அம்மாடியோ பார்க்கவே பயமா இருக்கு…! “20 குடும்பங்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம்…” 7 மாடி கட்டிடம் அதிரடி இடிப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…

51 minutes ago

BREAKING: 5 தொகுதி இடைத்தேர்தல் ரத்து?…. சற்றுமுன் சுப்ரீம் கோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு…..!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…

52 minutes ago

அவரு சட்டை போடல..! கல்யாணத்தில் நடந்த செம காமெடி… டிக்டாக்கை தெறிக்கவிடும் கலிபோர்னியா கல்யாண வீடியோ…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…

52 minutes ago