கடுமையான அதிகாரிகள்… நச்சரிக்கும் விற்பனையாளர்கள்… வெளிநாட்டவரை முகம் சுளிக்க வைத்த டெல்லி ஏர்போர்ட்… அமெரிக்கர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!!

Spread the love

டெல்லி விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் டியூட்டி-ஃப்ரீ கடைகள் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த டாமன் சும்ப்ரோகல் என்ற கட்டிடக் கலைஞர் விமர்சித்து வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளிடம் குடிவரவு அதிகாரிகள் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாகவும், அந்த சோதனையை முடித்து சில அடிகள் எடுத்து வைப்பதற்குள் டியூட்டி-ஃப்ரீ கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் பொருட்களை வாங்கச் சொல்லி பயணிகளைத் தொந்தரவு செய்வதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒரு நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு இது ஒரு மோசமான முதல் அனுபவத்தைத் தருவதாகவும் அந்த வீடியோவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, டாமனின் கருத்தை ஆமோதித்துள்ளார். விமான நிலையங்களில் பயணிகளிடம் விற்பனையாளர்கள் ஆக்ரோஷமாகப் பொருட்களை விற்க முயற்சிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பயணிகளுக்கு அமைதியான மற்றும் கண்ணியமான வரவேற்பை வழங்க வேண்டும் எனக் கூறி சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சரையும் டேக் செய்துள்ளார். இணையவாசிகள் மத்தியில் இந்த விவகாரம் இருவேறு கருத்துகளைப் பெற்றுள்ளது. சிலர் உலகெங்கிலும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இந்த விற்பனை முறை வழக்கமான ஒன்றுதான் என்று கூறினாலும், கடந்த 30 ஆண்டுகளாகத் தான் பல நாடுகளுக்குப் பயணித்திருப்பதாகவும், டெல்லியைப் போல இவ்வளவு நெரிசலான மற்றும் குழப்பமான ஒரு சூழலை வேறெங்கும் பார்த்ததில்லை எனவும் டாமன் பதிலளித்துள்ளார்.

Gayathri

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

7 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

7 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

7 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

7 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago