நண்பேன்டா..! “கவலைப்படாதீங்க.. எங்க இந்திய நண்பர்கள் பாதுகாப்பா தான் இருக்காங்க” இந்தியாவிற்கு மகிழ்ச்சி செய்தி அனுப்பிய ஈரான்..!!

Spread the love

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிசக்தி ஏற்றுமதி பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) தற்போது ஈரானின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு இந்தப் பாதையைத் திறக்க மறுத்து வரும் ஈரான், இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நட்பு நாடுகளுக்கு மட்டும் கப்பல்களைக் கொண்டு செல்ல சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தச் சூழலில், இந்தியாவிற்கு எரிபொருள் ஏற்றி வரும் சுமார் 19 கப்பல்கள் (9 இந்தியக் கொடி ஏந்தியவை, 10 வெளிநாட்டுக் கொடி ஏந்தியவை) ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சிக்கியிருப்பது கவலையை ஏற்படுத்தியது. ஏற்கனவே 94,000 டன் எல்பிஜி ஏற்றி வந்த ‘பிடபிள்யூ டைர்’ மற்றும் ‘பிடபிள்யூ எல்ம்’ உட்பட எட்டு இந்தியக் கப்பல்கள் ஈரானின் உதவியுடன் பாதுகாப்பாக அந்தப் பகுதியைக் கடந்து வெளியேறியுள்ளன.

மீதமுள்ள கப்பல்கள் மற்றும் அதில் உள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து எழுந்த கவலைகளுக்கு, டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில், “நமது இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளனர், கவலை வேண்டாம்” என்று ஈரான் தூதரகம் உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரானின் இந்த உறுதிமொழி, போர் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியாவிற்கான எரிசக்தி விநியோகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

திக்… திக்… வேறு சாதி இளைஞரைக் காதலித்த 21 வயது மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…

5 minutes ago

இந்தா மச்சான்… ரசகுல்லா சாப்பிடு… நண்பன் பேச்சை நம்பி… வாயில் போட்ட நொடியில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு… ம.பி – யில் அரங்கேறிய கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…

13 minutes ago

அடச்சீ… கோசம் கூட மனசாட்சி இல்லையா?… ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணைத் தள்ளிவிட்ட கொடூரன்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்… மும்பையில் பரபரப்பு…!!

மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…

20 minutes ago

திக்… திக்… திக்… காவல் நிலையம் அருகே பயங்கரம்… 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை… பின்னணி என்ன?… உ . பி – யில் குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…

26 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… கிட்ட வந்துருச்சு… நள்ளிரவில் பைக் இளைஞரைத் துரத்தி… மிதிக்கப் பாய்ந்த காட்டு யானை… நொடி பொழுதில் தப்பிய திகில் காட்சி…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…

40 minutes ago

ஐயோ பாவம்… பிரசவ அறையில் நிகழ்ந்த சோகம்… தாயின் சடலத்திற்கு அருகே நிற்காமல் அழுத பச்சிளம் குழந்தை… அடுத்த நொடி நடந்த அதிர்ச்சிச் சம்பவம்…!

பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…

45 minutes ago