கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டத்தில், கவுண்டம்பாளையம் நிர்வாகி கனிமொழி சந்தோஷ் பேசிய பேச்சுக்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. கூட்டத்தில் பேசிய அவர், “வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என யூடியூப்பில் ஜோதிட ரீதியாகக் கூறினால் ரூ. 15 லட்சம் தருவதாக கரூர் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், கரூர் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் பேசியதற்கான செல்போன் உரையாடல் பதிவு மற்றும் தேர்தல் தொடர்பான ஆதாரங்கள் அனைத்தும் தன்னிடம் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஜோதிடம் குறித்துப் பேசியபோது தனக்குக் கோபம் வந்ததாகவும், அன்றே இந்த உண்மையை வெளிப்படுத்த நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் தன் மீதும் தனது செயல்பாடுகள் குறித்தும் பரப்பப்படும் விமர்சனங்களுக்கும், கமெண்டுகளுக்கும் அவர் பதிலளித்தார்.
தனது அழகு மற்றும் ஆடம்பரம் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த கனிமொழி சந்தோஷ், “என்னை அழகான பொம்மை என்று கூறுகிறார்கள்; ஆனால் இந்த பொம்மை ஆபத்தான பொம்மையும் கூட” என்றும், தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசுமாறு சவால் விடுத்துள்ளார். மேலும், மக்கள் வரிப்பணத்தைச் சாப்பிடுவதாகவும், 26 கார்கள் வைத்திருப்பதாகவும் கூறப்படும் தகவல்களுக்கு ஆதாரங்கள் உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய அவர், சட்டமன்ற உறுப்பினர் என்றால் எளிமையாக மட்டுமே வர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்று தட்டிகேட்டுள்ளார்.
2031 தேர்தலை நோக்கி தவெக பயணிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் இரு துருவப் போட்டி என்ற ஒன்றே இருக்காது எனவும், தமிழக வெற்றி கழகம் மட்டுமே ஒரே சக்தியாகத் திகழும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக்கொண்ட அவர், கவுண்டம்பாளையத்தில் நிலுவையில் உள்ள பட்டா பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…
தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…
சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…