“பர்கர் கறியைப் பிடுங்கி… வீட்டின் கதவையே கழட்டி எறிந்த கொடூரம்…” கல்லை எறிந்து வாடகைதாரரைத் தாக்கிய இந்தியப் பெண்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!

Spread the love

கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர், தனது வீட்டை 50 வயதுடைய நபர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், அந்த வாடகைதாரர் தனது நண்பருடன் இணைந்து வீட்டின் தோட்டத்தில் பார்பிக்யூ சமைத்துள்ளார். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த அந்த வீட்டு உரிமையாளர் பெண், “சுவரில் கறை படிந்துவிடும்” எனக் கூறி சண்டையிட்டுள்ளார்.

சண்டை முற்றவே, கிரில்லில் வெந்துகொண்டிருந்த கறித் துண்டுகளைப் பிடுங்கி வீசிய அந்தப் பெண், வாடகைதாரர் மீது கற்கள் மற்றும் பொருட்களை வீசி எறிந்து கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, வாடகைதாரருக்குத் தெரியாமல் பூட்டை மாற்றுவது, வீட்டின் பிரதானக் கதவையே கழற்றி எறிந்து பாதுகாப்பு இல்லாமல் செய்வது எனத் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/DdD276UBTNp/?utm_source=ig_web_copy_link&stkn=MzRlODBiNWFlZA==

பாதிக்கப்பட்ட வாடகைதாரர் இச்சம்பவங்களை வீடியோவாக எடுத்து ‘Tiwana Farm Servivor’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடவே, அது இணையத்தில் காட்டுத்தீ போல வைரலானது. இந்த வீடியோக்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கனடா போலிஸார், வாடகைதாரரை அச்சுறுத்தித் தாக்கிய இந்தியப் பெண்ணைக் கையோடு கைவிலங்கு போட்டுக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“என்னால இருக்க முடியாது…” பாலத்திலிருந்து குதித்து இளைஞர்… சிக்கிய பரபரப்பு கடிதம்… காதல் தான் காரணமா…? மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…

10 minutes ago

“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…

46 minutes ago

“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…

54 minutes ago