#image_title
இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர் சங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரைப் பெற்ற இவர் தமிழில் ஏகப்பட்ட ஹிட்டு திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். தமிழில் காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், 2.0 என பல ஹிட் படங்களை இயக்கியிருக்கின்றார்.
முதன் முதலாக 2.0 மற்றும் ஐ திரைப்படத்தின் மூலமாக விமர்சனங்களை சந்தித்த இவர் பின்னர் வசூல் ரீதியாக சில பின்வாங்கல்களை சந்தித்தார். திரைப்படத்தை எடுக்க ஆரம்பித்த போது இவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. இருப்பினும் மூன்று வருட போராட்டத்திற்கு பிறகு நேற்று வெற்றிகரமாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
இந்தியன் 2 திரைப்படத்தை சங்கர் ஆரம்பிக்கும் போது மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தார்கள். நேற்று வெளியான இந்தியன் திரைப்படம் அனைத்து எதிர்பார்ப்புகளையும் உடைத்து விட்டது என்று தான் கூற வேண்டும். தமிழ்நாட்டில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் முதல் நாளில் 17 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
தெலுங்கில் 7 கோடி ரூபாயும், ஹிந்தி சினிமாவில் இரண்டு கோடி ரூபாயும் வசூல் செய்து இந்திய முழுவதும் 26 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஓப்பனிங் பெரிய அளவு இல்லை என்றாலும் வரும் நாட்கள் வார கடைசி நாட்கள் என்பதால் வசூலில் நல்ல சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் முதல் நாளின் இந்திய அளவில் 32 கோடி வசூல் செய்த நிலையில் அந்த அளவுக்கு கூட தனது வசூலில் இந்தியன் 2 திரைப்படம் முந்தவில்லை என்று கூறி வருகிறார்கள். எது எப்படியோ வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், நாவல்குண்ட் தாலுகாவைச் சேர்ந்த பிரியங்கா கமலாகர் (29) என்ற இளம் பெண், திருமணமாகி இரண்டே…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…