தமிழகத்திலுள்ள பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்றுடன் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் அக்டோபர் 6 இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. முதல் நாளான இன்றே மாணவர்கள் அனைவருக்கும் இரண்டாம் பருவத்திற்கான பாடநூல்களை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் காலாண்டு தேர்வு விடைத்தாள்களை இன்று விநியோகிக்க வேண்டும். பருவ மழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் மாணவர்களைக் கொண்டு மின்சாதனங்களை இயக்கக் கூடாது, உபயோகம் இல்லாத மின்பொருள்கள் பள்ளி வளாகத்தில் இருக்கக் கூடாது, பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயது கார் ஓட்டுநரான மாரீசெல்வன் என்பவர், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் ஆதிரா…
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய, வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்…
சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (38). இவருக்கும் சித்ரா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த…
11 வயதான ஜேசி லீ டுகார்ட் தனது வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்றபோது, பிலிப் காரிடோ மற்றும் அவரது…
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய வரலாறு படைத்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள…
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையை ₹1,000-லிருந்து ₹2,500 ஆக கணிசமாக உயர்த்துவதற்கான கோப்பிற்கு துணை…